• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-22 17:08:06    
தமிழ் மூலம் சீனம் பாடம் 94

cri

வாணி க்ளீட்டஸ். கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டது உங்கள் நினைவில் இருக்கிறதா? வழக்கம் போல புதிய வகுப்பு துவங்குவதற்கு கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களையும் வாக்கியங்களையும் மீளாய்வு செய்வோம்.

கிளிடஸ்......... உங்களுடன் சேர்ந்து பழைய வாக்கியங்களை பயிற்சி செய்கின்றேன்.
வாணி.......அப்படி என்றால் நாங்கள் இன்றைய வகுப்பைத் துவக்கலாம். 

கிளிட்டஸ்---- கடந்த வாரம்星期 xing qi, 月yue, 年,nian ஆகிய 3 சொற்கள் மீளாய்வு செய்தோம். குறிப்பாக 星期 xing qi என்று சொல்லுடன் வாக்கியம் அமைக்கும் பயிற்சியை செய்தோம்.

வாணி--- ஆமாம். கடந்த வாரம் நீங்கள் ஒரு நல்ல வாக்கியத்தை அமைத்தீர்கள், மீண்டும் சொல்லலாமா?

க்ளீட்டஸ் – கண்டிப்பாக. 星期 xing qi என்பது கிழமை.
我从星期一到星期五上班。Wo cong qing qi yi dao qing qi wu shang ban. நான் திங்கள் முதல் வெள்ளி வரை பணி புரிகின்றேன்.

வாணி – இங்கே cong…dao… என்பது என்ன என்ன முதல் என்ன என்ன வரை என்பதாகும். என்னைப் பின்பற்றி மீண்டும் பயிற்சி செய்யுங்கள்.
我从星期一到星期五上班。
Wo cong qing qi yi dao qing qi wu shang ban.

க்ளீட்டஸ் --我从星期一到星期五上班。
Wo cong qing qi yi dao qing qi wu shang ban.
நான் திங்கள் முதல் வெள்ளி வரை பணி புரிகின்றேன். 

வாணி – இனி. கடந்த வாரம் கற்றுக்கொண்ட 3 இறுதி ஒலிகளை மீளாய்வு செய்கின்றோம். முதலாவது ai.

க்ளீட்டஸ் – ai

வாணி -- 4 தொனிகளுடன் வாசியுங்கள். ai, ai, ai ai

க்ளீட்டஸ் -- ai ai ai ai

வாணி – அடுத்து ei

க்ளீட்டஸ் –ei

வாணி—4 தொனிகளுடன் வாசியுங்கள். ei ei ei ei

க்ளீட்டஸ் -- ei ei ei ei

வாணி – அடுத்து ui

க்ளீட்டஸ் – ui

வாணி—4 தொனிகளுடன் வாசியுங்கள். ui ui ui ui

க்ளீட்டஸ் -- ui ui ui ui 

வாணி—சரி, இன்று月yue, 年nian ஆகிய சொற்களுடன் தொடர்ந்து வாக்கியங்களை அமைக்கும் பயிற்சியை செய்கின்றோம்.
சீன மொழியில் திங்களை குறிப்பிடும் போது எண்களை நேரடியாக月yue என்பதற்கு முன் வைத்து பயன்படுத்துகின்றோம்.

1 2