• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-23 12:17:17    
5000ஆண்டுகளுக்கு முன்,மூளை அறுவை சிகிச்சை

cri

5000ஆண்டுகளுக்கு முன்,மூளை அறுவை சிகிச்சை

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக நம்பப்படும் மண்டை ஓடு ஒன்று, அண்மையில் சீனாவின் சாங்துங் மாநில அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. DAWENKOU பண்பாட்டுப் புதைபடிவங்களுடன், 1995ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இம்மண்டையோட்டை ஆய்வு செய்வதில் ஆய்வாளர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஓர் இளைஞனுடையதாகக் கருதப்பட்ட இம்மண்டையோட்டின் வலது பின்புறத்தில் 3.1 சென்டிமீட்டர் நீளமும், 2.5 சென்டிமீட்டர் அகலமும் உடைய துவாரம் ஒன்று காணப்படுகின்றது. எலும்பு திசுக்களைச் சரிசெய்வதற்காக அறுவை சிகிச்சையின் போது ஏற்படுத்தப்பட்ட இச்சிறிய துவாரம், மண்டையோட்டன் இயல்பான வளர்ச்சியுடன் இணைந்து, தற்போதைய அளவுக்குப் பெரிதாகியிருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சீன மருத்துவ வரலாற்றில், வெகு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட இவ்வறுவை சிகிச்சைக்குப் பின், மண்டையோட்டின் உரிமையாளர், பல ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்திருக்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சீனவின் சிங்குவா செய்தி நிறுவனம் , இத்தகவலை வெளியிட்டுள்ளது.

 

வியத்தகு சிற்றூர்

திபெத்தின் இமயமலை அடிவாரத்தில் துங்குங் என்னும் சிற்றூர் உள்ளது. கடந்த 82 ஆண்டுகளாக, இச்சிற்றூரில் குழந்தகள் பிறந்த வண்ணம் உள்ளனவேயன்றி எவரும் மரணமடைவில்லை என்பது, வியக்கத்தக்கதாகும். 1924ஆம் ஆண்டு அங்குக் கடைசி ஈமச் சடங்கு நடைபெற்றது. அதன் பின்பு, யாரும் இறக்கவில்லை.
1942ஆம் ஆண்டு, இச்சிற்றூரின் மக்கள் தொகை, 680. இது வரை, அது 6 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மிக மூத்தவருக்கு வயது 142. மிக இளையவனுக்கு இன்னும் ஒரு வயது ஆகவில்லை.

தரை மட்டத்திலிருந்து சராசரியாக 4000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இச்சிற்றூரில், காற்றின் அடர்த்தி, குறைவாக உள்ளது. கடும் குளிரும் நிலவுகிறது. அங்குப் பெரிய மரங்கள் வளர்வதில்லை. சிற்றூர் மக்கள், ஆண்டுதோறும் காய்கறிகள் உண்பது அரிது. அங்குள்ள வாழ்க்கை நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. ஆனால் துங்குங் சிற்றூர், நீண்ட ஆயுள் சிற்றூராக மாறியுள்ளமை, உண்மையே. இதற்கான காரணம், புரியாத புதிராகவே விளங்குகிறது.

1 2