• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-27 16:05:14    
போராடும் பூமி

cri

1914 முதல் 18 வரை நடந்த முதல் உலகப்போரை அறிந்திருக்கிறோம். 1939 முதல் 45 வரை நடந்து முடிந்த இரண்டாம் உலகப்போரை தெரிந்திருக்கிறோம். வளைகுடா போரால் ஏற்பட்ட உலக பாதிப்புகளை அனுபவித்திருக்கிறோம். அண்மைய ஈராக் போர் உலகையே உலுக்கியது என்றால் மிகையாகாது. போர் என்றால் பாதிப்பு. போரில் ஈடுபடும் நாடுகளுக்கு மட்டுமல்ல. உலகிற்கே பாதிப்பு.
போர் என்பது இன்று நடைபெறும் ஒன்றல்ல. காலம் காலமாக வரலாற்றில் ஏற்படும் சிவப்பு பதிவுகள். கல், கத்தி கொண்டு போரிட தொடங்கிய மனிதன், வில் அம்பு என முன்னேறினான். காலால் படை, குதிரைப்படை, யானைப்படை என அணிவகுத்தான். துப்பாக்கி, பீரங்கி என தளவாடங்கள் வளர்த்தான். தரைப்படை, விமானப்படை, கடல் படை என படைகள் பெருக்கினான். தற்கொலை தாக்குதல் என அச்சமூட்டினான். அனைத்தையும் கடந்து ஆளில்லாமலேயே இயக்கப்பட்டு எதிரியை அழிக்கும் தொழில் நுட்பங்களையும் தெரிந்து விட்டான். எல்லா காலங்களிலும் போர்கள் நடந்துள்ளன. போர்களில் பயன்படுத்தப்படும் கருவிகளும் அதன் வடிவங்களும் மாறுபட்டதேயன்றி போர்கள் குறையவில்லை. அனைத்தும் எதற்கு? பாதுகாப்பு என்ற பெயரில் உள்நாட்டு மக்களை காக்கிறோம் என மானுடத்தை அழிக்கத்தானே!!!


இப்போர்களை வரலாற்றில் படித்திருக்கிறோம். நாம் வாழும் நாட்களில் பல நாடுகளில் போர்கள் நடப்பதை பார்க்கிறோம். அதன் பாதிப்புகளை வாழ்க்கையில் அனுபவித்து இருக்கிறோம். நமக்கு தெரியாமலேயே போர் ஒன்றை சந்தித்து, அனுபவித்து, சமாளித்து கொண்டிருக்கறோம். உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர்களின் விளைவுகளை நாம் இன்று அனுபவித்து கொண்டிருப்பதை நான் குறிப்பிடவில்லை. அப்படியானால் வேறு என்ன போர்?
2004 டிசம்பர் திங்கள் 26 ஆம் நாள் உலகையே அலறவைத்த நாள். இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமி பேரலை இந்தோனேஷியா, அதன் சுற்றுப்பகுதிகள், தாய்லாந்து, இலங்கை, மாலத்தீவு, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் தமிழக கடற்கரை ஓரப்பகுதிகளான நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி, குளச்சல், சென்னை போன்ற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் நாசம் ஏற்படுத்தியது.
உலகிலேயே பாதுகாப்பான நாடு என பலரும் எண்ணிய அமெரிக்கா 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் ஏற்பட்ட கத்தரினா சூறாவளியை சமாளிக்க முடியாமல் திண்டாடியது நாம் அறிந்ததே.

1 2 3