வழக்கமாக மழை என்றால் ஆனந்தம் தான் பொங்கும். விவசாய மக்களுக்கு மனம் குளிரும். ஆனால் இன்று மழை என்றால் பயம். வெள்ளப்பெருக்குகள் பல்லாயிரம் உயிர்களை பழிவாங்கும் நிலைகள் தான் எதார்த்தம். சில ஆண்டுகளாக பலிவாங்கப்படும் வாழ்வு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆம்.. மனித செயல்பாடுகளினால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாறுதல்களுக்கு பூமி வழங்கும் பதில் தான் இது. நாம் பூமிக்கு எதிராக செயல்படுவதற்கு அது நம்மீது தொடுக்கும் போர் என்றே சொல்லாம். மனித செயல்படுகளினால் வெளியாக்கப்படுகின்ற பசுங்கூட வாயுக்களான கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றின் அதிமிக வெளியேற்றத்தால்காலநிலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதை காலநிலை மாற்றம் என்கிறோம். இயற்கையில் இருக்க வேண்டிய அளவைவிட பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகிறபோது காலநிலை மாற்றம் புவி வெப்பமேறலோடு பயன்படுத்தப்படுகிறது. 1970 - களிலிருந்து பூமியின் வெப்பம் சராசரியாக 4 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது, பசுங்கூட வாயுக்களின் அதிமிகு வெளியேற்றத்தால் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். பசுங்கூட வாயுக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் வெகுகாலம் வளிமண்டலத்தில் நிலைத்திருக்கிறது. எனவே பல ஆண்டுகளுக்கு அதன் விளைவு நமக்கு தெரிவதில்லை. எடுத்துக்காட்டாக இந்த வருடம் நாம் வெளியேற்றும் பசுங்கூட வாயுக்களின் விளைவை 40 50 ஆண்டுகளுக்கு பின்னர் தான் உணர முடியும். காலநிலை மாற்றம் பற்றி ஆய்கின்றபோது பெருங்கடல்களும், வளிமண்டலமும் தட்பவெப்பநிலை அதிகரிப்பு, ஆற்றல் மிகுந்த சூறாவளிகள், வெள்ளப்பெருக்குகள், கடல் மட்டம் உயர்வு ஆகியவற்றை கொண்டுவருவதோடல்லாமல் பூமியும் அவைகளோடு கைகோர்த்துவிட்ட நிலைமையைத் தான் கண்டுபிடிக்க முடிகிறது. பூமி பந்தின் முந்தைய வரலாற்றை பார்க்கும்போது வானிலை மாறுபாடுகள் வழமையாக தோன்றிய போதிலும் கடந்த உறைபனிக் காலத்தில் வானிலைக்கு அப்பாற்பட்டமாறுதல்கள் தெரிந்தன. எரிமலைகள், நிலநடுக்கம், கடலடியில் நிலச்சரிவுகள், சுனாமி பேரலைகள் என பூமி பல மாற்றங்களை கண்டது. மனித செயல்பாடுகளினால் ஏற்படும் காலநிலை மாற்றங்களினால் இது போன்ற பதில்களை பூமியிலிருந்து நாம் பெறுவதோடு வெப்பமேறிய பூமியை மட்டுமல்ல கொடூரமான எதிர்காலத்தை தான் காண நேரிடும்.

இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கோட்டிற்கு மேற்பட்ட உலகக்கண்டங்களை பனி மூடியிருந்தது. இதற்கான நீரை கடலிலிருந்து எடுத்துக் கொண்டுடது. இதன் விளைவாக உலக கடல் மட்டம் இப்போது நாம் பார்ப்பதை விட 130 மீட்டர் குறைவாக இருந்துள்ளது. பிரிட்டனுக்கும் ஐரோப்பிய கண்டத்திற்கும் மற்றும் அலாஸ்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நிலஅமைப்பால் எண்பிக்கப்படுகிறது. பனி உருகியபோது கடல் மட்டம் உயர தொடங்கியது. சில நூற்றாண்டுகளில் அந்த அளவு பல மீட்டர்களாக இருந்தது. 1990 - களின் நடுவில் ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய ஆய்வில் மத்தியதரைக்கடல் பகுதியில் கடல் மட்ட உயர்வுக்கும் தாழ்வுக்கும், இத்தாலி மற்றும் கிரீஸ்சிலும் ஏற்பட்ட எரிமலை வெடிப்பிற்கும் உள்ள தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 18, 000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள நிலையைக் காட்டிலும்மத்தியதரைக்கடல் பகுதியில் எரிமலை வெடிப்பு 300 விழுக்காடு அதிகரித்துள்ளது இத்தொடர்பை வெகுவாக நிரூபிக்கும். கிரீன்லாந்து பனிப்படிவங்களில் காணக்கிடக்கின்ற எரிமலைத் துகள்களின் அதிகரிப்பு மற்றும் எரிமலை வெடிப்புக்களால் வடபகுதியில் காணப்படும் சல்பேட் படிவங்கள் முதலியவை இத்தொடர்பை உறுதி செய்கின்றன.
1 2 3
|