வாணி- க்ளீட்டஸ். கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டது உங்கள் நினைவில் இருக்கிறதா?
க்ளீட்டஸ் – வீட்டில் தொடர்ந்து பயிற்சி செய்கிறேன். கேளுங்கள். கடந்த வாரம் முக்கியமாக月yue, 年,nian ஆகிய 2 சொற்களை கற்றுக் கொண்டோம். குறிப்பாக sheng ri 生日 என்ற சொல்லுடன் வாக்கியம் அமைக்கும் பயிற்சியை செய்தோம்.
வாணி --- ஆமாம். கடந்த வாரம் wo de sheng ri, 我的生日, அதாவது எனது பிறந்த நாள் என்ற வாக்கியத்தை அமைத்துள்ளோம். மேலும், 月yue, 年nian ஆகிய 2 சொற்களை எப்படி பயன்படுத்துவது என்பதைநீங்கள் சொல்லுங்கள்.
க்ளீட்டஸ் -- சீன மொழியில் திங்கள் மற்றும் ஆண்டைக் குறிப்பிடும் போது எண்களை நேரடியாக月yue, 年nian என்பதற்கு முன் வைத்து பயன்படுத்தினால் சரி. எடுத்துக்காட்டாக ஓராண்டில் 12 திங்கள் இடம்பெறுகின்றன. ஆகையால், 1 முதல் 12 வரை 月yue என்பதற்கு முன் வைத்து கூப்பிடலாம். அதே போல் 2007ஆம் ஆண்டு என்பதை குறிப்பிடும் போது, 2007年nian சொல்லலாம்.
வாணி—நல்லது. அடுத்து என்னைப் பின்பற்றி பயிற்சி செய்யுங்கள். Yi yue 一月。
க்ளீட்டஸ் -- Yi yue 一月. ஜனவரி.
வாணி – er yue, 二月。
க்ளீட்டஸ் -- er yue, 二月. பிப்ரவரி.
வாணி – 1998 nian.
க்ளீட்டஸ் – 1998 nian. 1998ஆம் ஆண்டு.
வாணி—2006 nian.
க்ளீட்டஸ் -- 2006 nian. 2006ஆம் ஆண்டு.
வாணி – 今天是2007年2月10日。Jin tian shi 2007 nian 2 yue 10 ri.
க்ளீட்டஸ் -- Jin tian shi 2007 nian 2 yue 10 ri. இன்று 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் நாள்.
வாணி – 我的生日是1980 年 11月22日。Wo de sheng ri shi 1980 nian 11 yue 22 ri .
க்ளீட்டஸ் -- Wo de sheng ri shi 1980 nian 11 yue 22 ri . எனது பிறந்த நாள் 1980ஆம் ஆண்டு நவம்பர் 22ந் நாள்.
வாணி – கடந்த வாரம் நாங்கள் 3 இறுதி தொணிகளைக் கற்றுக்கொண்டோம். முதலாவது, ao
க்ளீட்டஸ் – ao
வாணி—4 தொனிகளுடன் வாசியுங்கள். ao, ao, ao, ao
க்ளீட்டஸ் -- ao, ao, ao, ao
வாணி – அடுத்து, ou
க்ளீட்டஸ் –- ou
வாணி – ou, ou, ou, ou
க்ளீட்டஸ் -- ou, ou, ou, ou
வாணி – இனி, iu
க்ளீட்டஸ் -- iu
வாணி -- iu iu iu iu
க்ளீட்டஸ் -- iu iu iu iu
வாணி – நல்லது
வாணி – க்ளீட்டஸ் நீங்கள் அடிக்கடி தொடர் வண்டி மூலம் பயணம் செய்தீர்களா?
க்ளீட்டஸ் – ஆமாம். தற்போது தொடர் வண்டி பயணம் செய்தால் வசதியானது. குறைந்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடையலாம். சாலைப் போக்குவரத்து தொல்லை இல்லை.
வாணி – ஆமாம். இன்றைய நிகழ்ச்சியில் தொடர் வண்டி பயணம் பற்றிய உரையாடல் இடம்பெறுகின்றது. என்னுடன் சில புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளுங்கள். 火车 huo che. H-u-o, ch-e.
க்ளீட்டஸ் --火车 huo che. தொடர் வண்டி.
வாணி – மீண்டும் ஒரு முறை火车 huo che.
க்ளீட்டஸ் --火车 huo che. தொடர் வண்டி.
வாணி – 去上海的火车. Qu shang hai de huo che .
க்ளீட்டஸ் --去上海的火车. Qu shang hai de huo che . ஷாங்காய்க்குச் செல்லும் தொடர்வண்டி.
வாணி – இந்த வாக்கியத்தில் ஷாங்காய் ஒரு நகரின் பெயர். வேறு இடத்துக்கு போக வேண்டுமானால், இதனை மாற்றலாம். எடுத்துக்காட்டாக, 去北京的火车. Qu Bei jing de huo che .
க்ளீட்டஸ் -- 去北京的火车. Qu Bei jing de huo che . பெய்ஜிங்கிற்குச் செல்லும் தொடர் வண்டி.
வாணி -- 去晨耐的火车. Qu Chennai de huo che .
க்ளீட்டஸ் --去晨耐的火车. Qu Chennai de huo che . சென்னைக்குச் செல்லும் தொடர் வண்டி.
1 2
|