• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-30 21:01:09    
மிக முற்காலத் தீயணைப்புப் படை

cri

மிக முற்காலத் தீயணைப்புப் படை

சீனாவில், கி.பி. 960ஆம் ஆண்டு வட சொங் வமிச ஆட்சி நிறுவப்பட்டது. அதன் பின் சமூகப் பொருளாதாரம் வளர்ந்து வந்தது. நாட்டில் ஒரே செழுமையான காட்சி காணப்பட்டது. அப்போதைய தலைநகரான பியென்ஜிங்கின் வீதிகளில் வீடுகள் அடுத்தாற் போல கட்டியமைக்கப் பட்டதால் தீ விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வந்தன. 1023ஆம் ஆண்டு பேரரசர் றென் சொங் ( REN ZONG) அரியாணையில் வீற்றிருந்த பின், தீ விபத்து தடுப்பு பற்றிய கண்டிப்பான திட்டத்தை வகுத்தார்.அவர், சிறந்த படைவீரர்களைத் தேர்ந்தெடுத்துத், தீயணைப்புப் பணியில் ஈடுபடும் தனி ராணுவ அணியை அமைத்தார். இப்படை வீரர்களின் முதன்மைக் கடமையானது, இரவு நேரங்களில் சுற்றுக் கண்காணிப்பில் ஈடுபடுவதும், குறித்த நேரத்தில் விளக்கை அணைத்துத், தீ விபத்தை நிகழாமல் தடுக்குமாறு பொது மக்களை அறிவுறுத்துவதும் ஆகும். இத்தனி ராணுவ அணி, தீ அணைப்புக் கருவிகள் பலவற்றைக் கொண்டிருந்தமை, குறிப்பிடத் தக்கது. இதுவே, சீனாவின் மிக முற்காலத் தீயணைப்புப் படையாகும்.

குழந்தையைக் காப்பாற்றிய
ரஷிய அரசு தலைவர்

அரசு தலைவர் புத்தின் அண்மையில் ரஷிய கூட்டாட்சியின் துவா குடியரசில் பயணம் மேற்கொண்ட போது தங்கள் திருகு வானூர்தி (ஹெலிகப்டர் ) மூலம் கடும் நோயுற்ற குழந்தை ஒன்றைக் காப்பாற்றினார்.

அணிரா என்னும் இந்த ஒரு வயது பெண் குழந்தை, குடல் நோயினால் உயிராபத்திற்குள்ளாயிற்று. உள்ளூர் மருத்துவர்கள் ஆபத்திலிருந்து இக்குழந்தையைக் காப்பாற்றப் பெரிதும் பாடுபட்டனர். எனினும், இக்குடியரசைச் சேர்ந்த குழந்தை மருத்துவ மனைக்கு அனுப்பினால் தான், இப்பெண் குழ்ந்தை உயிர் பிழைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடனே, உள்ளூர் முதல் உதவி துறையினர், அரசு தலைவர் புத்தினுடன் இணைந்து சென்ற பணியாளர்களுடன் தொடர்பு கொண்டனர். புத்தின் அவர்கள் இத்தகவலை அறிந்ததும், குழந்தையைத், துவா குடியரசு குழந்தை மருத்துவ மனையில் சேர்க்கத் தங்கள் திருகு வானூர்தியைப் பயன்படுத்துமாறு கட்டளையிட்டார்.

குடியரசு குழந்தை மருத்துவ மனையில் சேர்க்கப் பட்ட அனிரா, தற்போது உயிர் ஆபத்திலிருந்து மீட்கப் பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

1 2