• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-30 21:01:09    
மிக முற்காலத் தீயணைப்புப் படை

cri

படிப்பில் பேரார்வமுடைய
ஸ்பெயின் நாட்டு மக்கள்

ஸ்பெயின் தலைநகரான மாட்ரீட்டில், நிலத்தடித் தொடர் வண்டி மூலம் செல்வோர் பலர் நூல்கள் படித்த வண்ணம் இருப்பதைக் காணலாம். நிலத்தடித் தொடர் வண்டியில் ஏறியதும், நிற்கும் நிலையிலுள்ள பயணிகள் ஆயினும் சரி, உட்காரும் நிலையிலுள்ள பயணிகள் ஆயினும் சரி, அவர்கள் நூல்களை எடுத்துப் படிப்பார்கள். சில சமயம், தொடர் வண்டியில் நெரிசல் காணப் பட்டாலும் பயணிகள் கண்ணும் கருத்துமாகப் படிப்பார்கள்.

ஸ்பெயின் மக்கள், படிப்பில் பேரார்வம் உடையவர்கள் என்பது உண்மை தான். ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகை, 4 கோடியே 40 லசட்சம் மட்டுமே. ஆனால், இந்நாட்டில் 40 ஆயிரம் நூல் விற்பனை நிலையங்கள் உள்ளன. அதன் ஆண்டு நூல் விற்பனைத் தொகை, 300 யூரோ ஆகும். கடந்த ஆண்டு, ஸ்பெயினில் 68 ஆயிரத்து 930 வகை நூல்கள் பதிப்பிக்கப்பட்டு,வெளியிடப்பட்டுள்ளன. 22 கோடியே 80 லட்சம் நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இணையகாலத்தில் நுழைந்த இன்றும், ஸ்பெயின் மக்கள், பாரம்பரிய நூல்களைக் கைவிடவில்லை. ஏறக்குறைய பாதியளவு ஸ்பெயின் மக்கள், கடைக்குச் சென்று நூல் வாங்க விரும்புகின்றனர். 14 வயதுக்கு மேற்பட்டோரில் 57 விழுக்காட்டினர் நூல் படிப்பது வழக்கம் என்று கருத்துக் கணிப்பு ஒன்று காட்டுகிறது.

விலையுயர்ந்த உயில்

பிரான்சின் பேரரசர்களில் நெப்போலியன் உலகப் புகழ்பெற்றவர். அவர் எழுதிய உயில் ஒன்று, அண்மையில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 500 அமெரிக்க டாகர் விலையில் அது ஏல விற்பனை செய்யவும் பட்டுள்ளது. இந்த உயிலில், திருத்தங்கள் மற்றும் அடித்தல்கள் பல தெளிவாகக் காணப்படுகின்றன. இதைத் தயாரித்த போது, நெப்போலியனின் ஊசலாட்ட மன நிலை இதிலிருந்து நன்கு தெரிகின்றது.

குடிவெறியில் விண்கலத்தை
ஓட்டிய விண்வெளி வீரர்கள்

விண் வெளி வீரர்கள், முன்பு குறைந்தது 2 முறையாவது குடி போதையில் விண்கலத்தை ஓட்டியதாக நாசாவைச் சேர்ந்த தனி விசாரணைக் குழு ஒன்று சூலை 26 ஆம் நாள் தெரிவித்துள்ளது.

இதனால் அமெரிக்க விண்வெளிப் பயண அமைப்பான நாசாவுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

லிசா நொவாக் என்ற விண்வெளி வீராங்கனை, சக விண்வெளி வீரரைக் காதலித்த பெண்ணைக் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம், உலகம் அறிந்ததே. இதைத்தொடர்ந்து விண்வெளி வீரர்களின் நடத்தை பற்றி விசாரணை நடத்த, 8 பேர் அடங்கிய குழு ஒன்றை, நாசா நியமித்தது. விண்வெளி வீரர்களிடம் கடுமையான குடிப்பழக்கம் இருப்பது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.


1 2