• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-04 15:54:19    
சுற்றுலா இடமான சொர்க்கக் கோயில்

cri

தியன் தான் அல்லது சொர்க்கக் கோயில், சீனாவில் தற்போது காணப்படும் மிகப் பெரிய ஆலயக் கட்டிடங்களில் ஒன்றாகும். இது, 1420ம் ஆண்டில், கட்டப்பட்டது. மிங் மற்றும் சிங் வம்ச காலங்களின் பேரரசர்கள், வசந்தகாலத்தில் அமோக அறுவடை பெறவும், கோடைக்காலத்தில் மழை பெய்யவும் பிரார்த்தனை செய்து, குளிர்காலத்தில் சொர்க்கத்தை நோக்கி வணங்கிய இடமாகும். சுவர்க்கம் வட்டமானது, பூமி சதுரமானது என்ற பழங்கால நம்பிக்கையைப் பின்பற்றி, இங்குள்ள கட்டிடங்கள் பல வட்டமாகக் கட்டியமைக்கப்பட்டுள்ளன.

சொர்க்கக் கோயில், 260 ஹெக்டருக்கும் மேற்பட்ட நிலபரப்புடையது. இது, அரண்மனை அருங்காட்சியகத்தைப் போல் 3 மடங்கு பெரிதாக இருக்கின்றது. இது பழங்கால கட்டிடங்களில் தலைசிறந்த ஒன்றாகும். உலகில், இது, பெரும் புகழ்பெற்ற கோயிலாகும்.

அங்கு 300 மீட்டருக்கு மேலான நீளம் கொண்ட நடைபாதை ஒன்று இருக்கின்றது. இந்நடைபாதையில், நான்குத் திசையிலும் பார்த்தால், முதலில் கண்களுக்கு தெரிபவை, பரந்த வானமும் நல்ல அறுவடைக்காக பிரார்த்தனை செய்யும் மண்டபமுமே ஆகும்.

1 2