• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-04 15:54:19    
சுற்றுலா இடமான சொர்க்கக் கோயில்

cri

முக்கிய நுழை வாயிலில் நுழைந்ததும் பிரார்த்தனை மண்டபத்தின் காம்பீரமான தோற்றம், வருவோர் அனைவரையும் கவர்கிறது. மூன்று தட்டுத் தாழ்வாரம், கூம்பு வடிவிலான கூரை, உச்சியில் ஒரு தங்க மூடி ஆகியவற்றைக் கொண்ட இம்மண்டபம், ஒரு உன்னதமான, வட்ட வடிவான அமைப்பு ஆகும். அதன் மண்டப அமைப்பு மிகவும் நுட்பமானது. உள் கட்டுக்கோப்பில் அதன் முழு அமைப்பையும் தாங்குகின்ற உருக்கோ, காரையோ கிடையாது. 38 மீட்டர் உயரம் 30 மீட்டர் விட்டம் கொண்ட இம்மண்டபம், பிரமாண்டமான 28 மரத்தூண்கள் தாங்கி நிற்கின்றன. நடுவிலுள்ள நான்கு தூண்கள், வேதாள கிணற்றுத்தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் 19.2 மீட்டர் உயரமும் 5 மீட்டர் சுற்றளவும் உடையவை. அவை நான்கும், நாலு காலங்களைக் குறிப்பனவாகும். அவற்றைச் சுற்றி உள்ளும் புறமுமாக ஒவ்வொன்றும் 12 தூண்களையுடைய 2 வளையங்கள் உள்ளன. உள் வளையம் ஆண்டின் 12 திங்கள்களையும், புற வளையம் சீன மக்கள் கணிக்கும் முறையில் பகலையும் இரவையும் குறிக்கின்றன.

1889ம் ஆண்டில், நல்ல அறுவடைக்கான பிரார்த்தனை மண்டபம் இடி மின்னல் காரணம் சேதமடைந்தது. அடுத்த ஆண்டில், பேரரசர் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து, இம்மண்டபத்தைச் சீரமைப்பது பற்றி விவாதித்தார். குறிப்பிட்ட வடிவமைப்பு மாதிரி இல்லாததால், உழைப்பாளர்கள், தங்கள் நினைவில் இருந்த உருவத்தை மாதிரியாகக் கொண்டு, கட்டியமைத்தனர். எனவே, தற்போதைய நல்ல அறுவடைக்கான பிரார்த்தனை மண்டபம், சிங் வம்ச காலத்தில் அமைக்கப்பட்டதாகும். ஆனால், இதன் அடிப்படைக் கட்டிட நடை மற்றும் அமைப்பு, மிங் வம்சத்தின் மாதிரியைப் போன்று காணப்படுகிறது.

 


1 2