• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-05 12:51:49    
பெருநிலப்பகுதியில் வாழும் ஹாங்காங் மக்கள்

cri

பத்தாவது ஆண்டு நிறைவு நாள்

கடந்த ஜூலை முதல் நாள், ஹாங்காங் மீதான அரசுரிமை மீண்டும் சீனாவுக்குத் திரும்பியதன் பத்தாவது ஆண்டு நிறைவு நாளாகும். கடந்த பத்து ஆண்டுகளாக, பெருநிலப்பகுதியில் வேலை செய்து, வளர்ச்சி வாய்ப்பை நாடும் ஹாங்காங் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் முயற்சியின் மூலம், பெருநிலப்பகுதிக்கும், ஹாங்காங்கிற்கும் இடையிலான தொடர்பு மேலும் நெருக்கமாகியுள்ளது.

பான் குவெய் சின் அம்மையார், பெய்சிங்கிற்கான ஹாங்காங் வர்த்தக வளர்ச்சி பணியகத்தின் அலுவலக பணியாளராவார். கடந்த ஆண்டின் வசந்தகாலத்தில், வேலை செய்ய பெய்சிங்கிற்கு அவர் அனுப்பப்பட்டார்.

வேறுபட்ட காலநிலையைத் தவிர, பெய்சிங் மாநகர், ஹாங்காங்கை விட மிகப் பெரியது என்று பான் குவெய் சின் அம்மையார் கூறினார்.

பான் அம்மையாரைப் பொறுத்த வரை, பெய்சிங்கிற்கும், ஹாங்காங்கிற்குமிடையிலான வேறுபாடு இவ்விரண்டு அம்சங்களில் மட்டும் நிலவவில்லை. ஹாங்காங்கில், மக்களின் பணி மற்றும் வாழ்க்கை ஓட்டம் வேகமாக இருக்கின்றது. பணி நேரம் அதிகமாக இருக்கிறது. விழாக்களின் போதும் விடுமுறை நாட்களிலும் வேலை செய்வது வழக்கம். பெய்சிங்கில், பணி இன்னமும் தீவிரமாகிய போதிலும், பகுதி நேரத்தில் சொந்த வேலைக்கான நேரம் அதிகம். வேறுபட்ட வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இது பற்றி அவர் கூறியதாவது:

"பெய்சிங், பண்பாட்டு நகராக திகழ்கின்றது. சுற்று பயணம் செய்யக்கூடிய இடங்கள் பலப்பல. வார இறுதியில், '798' போன்ற இடங்களுக்குச் செல்ல விரும்புகின்றேன். வெவ்வேறான பண்பாடுகளைப் கண்டு ரசிக்க விரும்புகின்றேன். தனிப்பட்ட நேரத்தில், முன்பு ஹாங்காங்கில் கவனிக்காத பண்பாடுகளைக் கண்டறிந்து ரசிக்கலாம்" என்றார் அவர்.

798 கலை

Pan அம்மையார் குறிப்பிட்ட'798', வட கிழக்கு பெய்சிங்கின் Chao Yang பிரதேசத்தில் உள்ள 798 கலைப் பகுதியாகும். முன்னதாக, இது, 1950ஆம் ஆண்டுகளில் கட்டியமைக்கப்பட்ட மின்னணு தொழிற்சாலையாக இருந்தது. பின்னர், தொழிற்சாலை வேறு இடத்துக்கு பெயர்ந்தது. ஜெர்மன் தனிச்சிறப்பு கொண்ட ஆலையின் கட்டிடம், ஆசியாவில் அரிதாக காணப்பட்டதால், இக்கட்டிடம் தக்கவைக்கப்பட்டுள்ளது.

படிப்படியாக, பெரும் எண்ணிக்கையிலான கலைஞர்கள் இங்கு, கலைக் கூடங்களை நிறுவினர். தற்போது, 798 தொழிற்சாலை, பல்வகை கலைகள் ஒன்று திரளும் 798 கலை பகுதியாக மாறியுள்ளது. இத்தகைய இடம், ஹாங்காங்கில் காணபடவே இல்லை. பெய்சிங்கில் மட்டுமே, சீனாவின் கலை மையத்தின் ஈர்ப்பு ஆற்றலை உணர முடியும் என்றும் Pan அம்மையார் கூறினார்.

1 2