• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-05 12:51:49    
பெருநிலப்பகுதியில் வாழும் ஹாங்காங் மக்கள்

cri

Gao Qi Bin என்னும் ஹாங்காங் இளைஞர், பீகிங் பல்கலைக்கழகத்தின் சந்தை கொள்வனவுத் துறையில் கல்வி பயில்கின்றார். சீனாவின் உள்ளார்ந்த வளர்ச்சி ஆற்றல் மீது உலகம் கவனம் செலுத்துகிறது. பெருநிலப் பகுதிக்கு வந்து, இங்குள்ள நிலைமையைப் புரிந்து கொள்வது, தனக்கு நன்மை பயக்கும் என்றும், பெய்சிங்கில் பல்கலைக்கழகத்தில் தாம் கல்வி பயில்வதற்கு இது காரணமாகும் என்றும் கூறினார். அவர் கூறியதாவது:

"ஹாங்காங்கில் வளர்ந்த எனக்கு தற்போது பெருநிலப்பகுதியில் கல்வி பயிலும் அனுபவம் உண்டு. எதிர்காலத்தில், மற்றவர்களை விட எனது வளர்ச்சிக்கு இதனால் மேம்பாடு கிடைக்கும்" என்றார், அவர்.

பீகிங் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொள்வதைத் தவிர, சமூக நிறுவன நடவடிக்கையில் அவர் பங்கெடுக்கின்றார். தற்போது, அவர் பீகிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹாங்காங் பண்பாட்டுச் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இந்த சமூக நிறுவனத்தில், ஹாங்காங் மாணவர்களும், ஹாங்காங் மீது ஆர்வம் காட்டும் பெருநிலப்பகுதி மாணவர்களும் உள்ளனர். சமூக நிறுவன நடவடிக்கையில், பெருநிலப்பகுதியின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மாணவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். வெவ்வேறான தனித்தன்மை வாய்ந்த கூட்டாளிகளுடன் பழகலாம். ஹாங்காங்கின் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டால், இந்த வாய்ப்பு கிடைக்காது என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு, பல்கலைக்கழகத்திலிருந்து Gao Qi Bin பட்டம் பெறுவார். பெருநிலப்பகுதியில் வேலை செய்ய அவர் விரும்புகின்றார்.
கூட்டு நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களைத் தவிர, பெருநிலப்பகுதியில் முதலீடு செய்யும் ஹாங்காங் வணிகர்கள் மிகவும் சுறுசுறுப்பாகியுள்ளனர். திரு Zeng Zhi Ming, Jin Li Lai குழுமத்தின் நிர்வாகத் தலைமை இயக்குநர் ஆவார். கடந்த 80ஆம் ஆண்டுகளில், Jin Li Lai குழுமம், பெருநிலப்பகுதிச் சந்தையில் நுழைந்தது. ஆடை, டை உள்ளிட்ட துணிப் பொருட்களைத் தயாரித்து, விற்பனை செய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, பெருநிலப்பகுதிப் பொருளாதார வளர்ச்சியை நேரில் கண்டவர்களில் திரு Zeng Zhi Ming ஒருவராவார். அவர் கூறியதாவது:

"கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, நாட்டின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணிகளின் மூலம், உலகில் உள்ள இதர இடங்களை விட, பெருநிலப்பகுதியின் வளர்ச்சி வேகம், ஓர் அற்புதம்" என்றார் அவர்.

Jin Li Lai குழுமத்தின் உற்பத்தி பொருட்கள் குறிப்பாக ஆடவருக்கான ஆடைகள் மற்றும் டைகள் பெருநிலப்பகுதியில் மிகவும் வரவேற்கப்படுகின்றன. ஹாங்காங் வணிகர்களுக்கென, சீரான முதலீட்டுச் சூழலையும், தக்க முன்னுரிமைச் சலுகைகளையும் பெருநிலப்பகுதி வழங்கியுள்ளது என்றும், பெருநிலப்பகுதியில் முதலீட்டுத் திட்டப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது மீது தாமும், இதர ஹாங்காங் வணிகர்களும் மேலும் நம்பிக்கை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனாவின் மேற்குப் பகுதி முன்னதாக வளர்ச்சியடையாத பிரதேசமாக இருந்தது. சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிப் பணி நடைமுறைக்கு வந்தவுடன், ஹாங்காங் வணிகர்கள் பலர் அங்கு முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். திரு Li Hong, அவர்களில் ஒருவராவார். ஹாங்காங் Hua Fan குழுமத்தின் இயக்குநர் குழுத் தலைவராவார்.

மின்னணு தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரியாற்றல், மருத்துவச் சாதனங்கள் ஆகியவை இடம்பெறும் பன்னாட்டு குழுமம் இதுவாகும். 2000ஆம் ஆண்டு, வட மேற்குச் சீனாவின் Xi An நகரில் உள்ள Chang An புதிய ரகத் தாராள தொழிற்துறை மண்டலத்தில் முதலீடு செய்ததோடு, கூட்டு நிறுவனத்தையும் Li Hong நிறுவினார். அவரின் நிறுவனம், இம்மண்டலத்தில் முதலாவது அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனமாகும்.

இதற்குப் பிந்திய சில ஆண்டுகளில், Xi An நகரில் Hua Fan குழுமத்தின் அலுவல் விரைவாக வளர்ந்து, அதன் மதிப்பு ஆண்டுக்காண்டுக்கு மடங்காக அதிகரிக்கின்றது. Li Hongஉம், அவரின் சக பணியாளர்களும் Xi An நகரை நேசிக்கின்றனர். அவர்கள் உள்ளூர் நண்பர்கள் பலருடன் பழகுகின்றனர். மேற்குப் பகுதிப் பொருளாதாரத்தின் வெகு வேகமான வளர்ச்சி, அவர்களின் மனதில் ஆழ்பதிந்துள்ளது. Li Hong கூறியதாவது:

"நான் இங்கு வந்த போது, Chang An புதிய ரகத் தாராள தொழிற்துறை மண்டலம் ஒதுக்குபுறமான இடமாக இருந்தது. இங்கு அதிக மக்கள் இல்லை. கடந்த சில ஆண்டுகால வளர்ச்சியின் மூலம், உயர்ந்த கட்டிடங்கள் எங்கெங்கும் காணப்பட்டுள்ளன. பல தொழில் நிறுவனங்கள் மண்டலத்தில் நுழைந்துள்ளன" என்றார், அவர்.

ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய பத்து ஆண்டுகளில், மேலும் அதிகமான ஹாங்காங் மக்கள், பெருநிலப்பகுதிக்கு வந்து, வேலை செய்து, வாழ்கின்றனர். ஹாங்காங்கில் நிதானமான அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையினால், அவர்கள் கவலையின்றி தங்களது ஊரை விட்டு, பெருநிலப்பகுதிக்கு வந்துள்ளனர். அதே வேளையில், பெருநிலப்பகுதி, அவர்களுக்கு மேலும் பரந்துபட்ட வளர்ச்சி வாய்ப்பை வழங்கியுள்ளது.


1 2