• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-06 12:58:41    
தென் துருவ அறிவியல் கள ஆய்வில் ரோபோட்டுகள்

cri

இவ்வாண்டின் இலையுதிர்காலத்தில் மேற்கொள்ளப் படவுள்ள 24வது தென் துருவ அறிவியல் கள ஆய்வு நடவடிக்கையில், "பனிக்கட்டி மற்றும் உறைபனி பரப்பில் நடமாடும் ரோபோட்", "தாழ்வான வானில் பறக்கும் ரோபோட்" ஆகிய இரு இயந்திர மனிதர்கள் பயன்படுத்தப்படும். சீனாவின் சாங்காய் துருவ ஆய்வு மையம், ஆகஸ்ட் 27ஆம் நாள் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

தென் துருவ அறிவியல் கள ஆய்வு நடவடிக்கையில், சீனா, பகுத்தறிவுடைய இயந்திர மனித தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது இதுவே முதன் முனறயாகும்.

பனிக்கட்டி மற்றும் உறைபனிப் பரப்பில் நடமாடும் இயந்திர மனிதனால், கள ஆய்வுக் குழு உறுப்பினர்களுக்கு உயிராபத்தை விளைவிக்கக் கூடிய ஆழமறியா பனிக்கட்டி விரிசலைக் தாண்டிச் செல்ல முடியும். அன்றி, அதனால் உறைபனி குன்றையும் கடந்து செல்ல முடியும். தென் துருவப்பனிக்கட்டிப் பரப்பில், அது, 40 கிலோகிராம் எடையுள்ள பொருளைச் சுமந்து செல்லக் கூடியது. அத்தடன், 100 கிலோகிராம் எடையுள்ள சுமையையும் இழுத்துச் செல்லக் கூடியது.

தாழ்வான வானத்தில் பறக்கும் இயந்திர மனிதனோ, உருவில் சிறு விமானம் போன்றது. அதன் எடை, 20 கிலோகிராம் மட்டும். அதனால் 5 கிலோகிராம் எடையுள்ள சுமையை மட்டும் ஏற்றிச் செல்ல முடியும். எனினும், மணிக்கு 50 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து ஒரு மணிநேரம் பறக்க முடியும்.

மதிப்பிடற்கரிய கடலடி கருவூலங்கள்

கடலடியானது, உலகில் மிகப் பெரிய கருவூலமாகும். புள்ளிவிபரங்களின் படி, உலகில் பல்வேறு கடல்களின் அடியில் சுமார் 30 லட்சம் கப்பல்களின் உடைந்த பகுதிகள் உள்ளன.

1 2