• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-06 12:58:41    
தென் துருவ அறிவியல் கள ஆய்வில் ரோபோட்டுகள்

cri

1985இல், புகழ்பெற்ற நாடாய்வாளர் மெல் ஃபிஷேர், அமெரிக்காவின் ஃபிலோரிடா மாநிலத்திந்கு அருகிலுள்ள கடலடியில், "திருமதி அடோகா" என்ற பாய்மரக் கப்பலைக் கண்டுபிடித்தார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இக்கப்பல், 1622ஆம் ஆண்டு சூறாவளியால் தாக்குண்டு கடலடியில் மூழ்கியது. கப்பலில் 40 டன் தங்க மற்றும் வெள்ளி நாணயங்களும் 40 கிலோகிராம் மரகதங்களும் உண்டு. இவற்றின் மதிப்பு, 40 கோடி அமெரிக்க டாலர்.

1987இல், வட காரோலினா மாநிலக் கடற்பரப்பல் மூழ்கியிருந்த "SS மத்திய அமெரிக்கா" என்னும் கப்பல், பின்னர் கண்டுபிடிக்கபபட்டு வெற்றிகரமாக மீட்கப்பட்டது."கலிபோர்னிய தங்க அகழ்வு காலத்தில்" கண்டெடுக்கபபட்ட இயற்கைத் தங்கக் கட்டி உள்பட, கப்பலிலான அனைத்துத் தங்கங்களின் மதிப்பு, 10 கோடி அமெரிக்க டாலராகும்.

கியூபாவின் அருகிலுள்ள கடற்பரப்பில் 18ஆம் நூற்றாண்டில் மூழ்கிய பிரான்சின் கப்பல் ஒன்றை, மீட்புப்பணி நிறுவனம் ஒன்று ஏற்கனவே கண்டுபிடித்துள்ளது. இக்கப்பலில் 17 பெட்டி தங்கக்கட்டிகளும் 15000 தங்க நாணயங்களும் 6 பெட்டி நகை நட்டுகளும் 10 லட்சத்துக்கு மேலான வெள்ளி நாணயங்ளும் உள்ளனவாம். அவற்றின் மொத்த மதிபபு 200 கோடி அமெரிக்க டாலராகும்.

இது தவிர, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கடலாய்வாளர் கிலிஃபோர்டும், "WHY DAH" என்னும் கொள்ளைக்காரக் கப்பலை மீட்கவுள்ளதாகத் தெரிவித்தார். அத்லாந்திக் பெருங்கடலில் மூழ்கிய இக்கப்பலில், பெரும் எண்ணிக்கையிலான தங்க நாணயங்கள், மணிக் கற்கள் மற்றும் பல பத்து யானை தந்தங்கள் உண்டு. அவற்றின் மொத்த மதிப்பு, 20 கோடி பவுண்டு என்று மதிப்பிடப் படுகின்றது.

தாய்லாந்தில், 75 ஆண்டுகளில்

18 அரசியலமைபபுச் சட்டங்கள்

தாய்லாந்தில், புதிய அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டிருப்பதாக இந்நாட்டின் தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 20 ஆம் நாள் அறிவித்துள்ளது.

தாய்லாந்தில், 1932 ஆம் ஆண்டு வரம்புடை முடியரசு ஆட்சி, நடைமுறைக்கு வந்தது முதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட 18வது அரசியலமைப்புச் சட்டம் இதுவாகும். பெங்காக் நகர மையப் பகுதியில் அமைந்துள்ள "ஜனநாயக நினைவுச் கின்னம்", கடந்த ஓராண்டாக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் இடமாக விளங்கி வருகின்றது. பல எதிர்ப்புப் பேரணிகள் அங்கேயே நடந்தவண்ணம் உள்ளன. ஏனென்றால், இந்த நினைவுச் சின்னத்தில் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம், விழிபாட்டுக்கெனப் போற்றி வைக்கப் படுகின்றது.

கடந்த 75 ஆண்டுகளில், ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு ஒரு அரசியலமைப்புச் சட்டம் வீதமுள்ள நிலை, தாய்லாந்தில் உருவெடுத்துள்ளது. தாய்லாந்தில் அடிக்கடி ஆட்சிக்கவிழ்ப்பு நடைபெற்று வருவது இதற்கு முக்கிய காரணமாகும். கடந்த 60 ஆண்டுகளில் 20 ராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகள் நிகழ்ந்தன. இவற்றில் 14 ஆட்சிக் கவிழ்ப்புகள் வெற்றி பெற்றன. புதிய அரசுகள் ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அரசியலமைப்புச்சட்டத்தை மீண்டும் இயற்றி வெளியிட்டதுண்டு.

தாய்லாந்தில், மன்னரை, அரசுத் தலைவராகக் கொண்ட ஜனநாயக அரசியல் அமைப்பு முறை நடைமுறைப்படுத்தப் படுவதாக, ஏறக்குறைய அனைத்து அரசியல் அமைப்புச் சட்டங்களும் அறிவித்திருந்தன. மன்னர் நாட்டின் அரசுத் தலைவரும் ஆயுதப் படைகளின் உச்சத் தலைமைத் தளபதியுமாவர். எவரும் மன்னர் மீது குற்றஞ்சாட்டவோ வழக்குத் தொடரவோ கூடாது. நாடாளுமன்றம், அமைச்சரவை, நீதிமன்றம் ஆகியவற்றின் மூலம், முறையே சட்டமியற்றல், நிர்வாகம் மற்றும் நீதி சட்டத் துறையின் அதிகாரங்களை மன்னர் பயன்படுத்துவார் என்று ஏறக்குறைய அனைத்து அரசியல் அமைப்பு சட்டங்களும் விதித்துள்ளன.


1 2