
தென்கிழக்கு திபெத்தின் லின்சி பிரதேசத்தில் இயற்கைக்காட்சிகள் எழிலானவை. மென்பா, லோபா முதலிய சிறுபான்மை தேசிய இனங்கள் இங்கு வாழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளில், தானியத்திற்கான பன்நோக்கு உற்பத்தி ஆற்றலைப் பாதுகாத்து உயர்த்தும் முன்னிபந்தனையுடன், லின்சி பிரதேசம், தனித்தன்மை வாய்ந்த வேளாண்மையையும் கால் நடை வளர்ப்பையும் ஆக்கப்பூர்வமாக முன்னேற்றியுள்ளது. எனவே விவசாயிகளும் ஆயர்களும் மென்மேலும் வளமான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில், வின்சி பிரதேசத்தின் தனிச்சிறப்பியல்புடைய வேளாண்மை பற்றியும் கால் நடை வளர்ப்பு பற்றியும் அறிமுகப்படுத்துகின்றோம்.
லின்சி மாவட்டத்தின் பாயி நகரம், இம்மாவட்டத்திலிருந்து 20 கிலோமிட்டர் தூரத்தில் உள்ளது. முப்பதாயிரம் பேர் மக்கள் தொகையுடைய இச்சிறிய நகசம், தெளிந்த நீர்-பசுமை அடர்ந்த மலைகளுக்கிடையே அமைகின்றது. yangjin என்ற பென், அங்குள்ள ஒரு புகழ்பெற்ற காய்கறி பயிரிடுபவர். அவரது காய்கறி பயிரிடும் நிலத்தில், தக்காளி, வெள்ளரிக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட, பத்துக்கு மேற்பட்ட காய்கறிகள் வளர்கின்றன. காய்கறி பயிரிடுவதன் மூலம் ஆண்டுதோறும் 60 அல்லது 70 ஆயிரம் யுவான் வருமானம் அவர் பெறுகின்றார். காய்கறிகளை வளர்ப்பதன் நன்மை பற்றி அவர் கூறியதாவது,

"முன்பு நான் தானியம் பயிரிட்டேன். தானிய விளைச்சல் அதிகமில்லை. அவற்றை விற்று அள்ளளவு பணம் பெறவில்லை. வாழ்க்கை மிகவும் இன்னல். 2002ம் ஆண்டு நான் காய்கறிகளைப் பயிரிடத் துவங்கினேன். ஆண்டுக்காண்டு வருமானம் அதிகரித்து வருகின்றது. வாழ்க்கையும் மென்மேலும் சிறப்பாகியுள்ளது" என்றார்.
yangjin இருக்கும் கிராமத்தில் 50 குடும்ப விவசாயிகள் இருக்கின்றனர். கிராமம் முழுவதிலும் மொத்தம் 49 ஹெக்டர்விளை நிலம் உண்டு. கிராம அரசாங்க அதிகாரி நிமா அறிமுகப்படுத்துனகயில், எங்கள் jiadingga கிராமத்தில் தற்போது பல்வகை பயிரிடுதல், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபடும் குடும்பங்களின் எண்ணிக்கை, 48 ஆகும். 30க்கும் அதிகமான சிறிய பெரிய வாகனங்களும், வேளாண் பயன்பாட்டு இயந்திரங்களும் இருக்கின்றன. கிராமவாசிகளின் நபர்வாரி ஆண்டு வருமானம் பத்தாயிரம் யுவானைத் தாண்டியுள்ளது என்று கூறினார். விவசாயிகளும் ஆயர்களும் வளமடைவதற்குத் தலைமை தாங்கிய நிமா, தானும் வளமடைவதில் தேர்ச்சி பெற்றவர். jiadingga கிராமத்தில் வணிகம் செய்த முதலாவது நபர், அவராவார். அன்றி, வாகனம் வாங்கி போக்குவரத்தில் ஈருபட்ட முதலாவது கிராமவாசியும் அவரேயாவார்.
1 2
|