தமது பணத்தில், அவர் புதிய விட்டைக் கட்டியமைத்தார். அவர் பேசுகையில், இன்று, கிராமத்திலுள்ள மிகப்பெரும்பாலானவர்கள், சிமேந்து கட்டமைப்பிலான புதிய வீடுகளில் வசிக்கின்றனர். கிராமவாசிகள் மேற்கொண்டுள்ள தனித்தன்மை வாய்ந்த வேளாண்மையும் கால் நடை வளர்ப்பும் இதற்குக் காரணம் என்று கூறினார். அவர் கூறியதாவது,
"எங்கள் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் 2000ம் ஆண்டில் காய்கறிகளை பயிரிடத் துவங்கினர். 2006ம் ஆண்டில் எங்களின் நபர்வாரி வருமானம், 11 ஆயிரத்து 900 யுவான் ஆகும். 2010ம் ஆண்டின் நபர்வாரி வருமானம் இலக்கு இருபதாயிரத்துக்கு மேல் ஆகும். எங்கள் கிராமத்தில், அனைவரும் சிறந்த உனவு உட்கொள்கின்றனர். அழகான ஆடை அணிகின்றனர்." என்றார், அவர்.

லின் சி பிரதேசத்தில் செழிப்பான வேளாண் மூலவளமும் சுற்றுலா மூலவளமும் உண்டு. jiadingga கிராமத்தின் வளர்ச்சி என்பது, முழு லின்சி பிரதேசத்தின் ஒரு சிறிய அடையாளம் மட்டுமே. கடந்த சில ஆண்டுகளில், மூலவள மேம்பாட்டினை முழுமையாக பயன்படுத்தி, தொழிற்பயிர்கள், மருந்துவகைகள், காய்கறிகள் உள்ளிட்ட தனிச்சிறப்பியல்புடைய, மேம்பாடுடைய தொழில்களை லின்சி பிரதேசம் பெரிதும் வளர்த்துள்ளது. அதே வேளை திபெத் பன்றி, திபெத் கோழி ஆகியவை முக்கிய இடம்வகிக்கும் கால் நடை வளர்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், தனித்தன்மை வாய்ந்த வேளாண்மையின் அளவு பெரிதாவது, அதன் வேளாண் உற்பத்திப்பொருட்கள் அதிகரிப்பது, விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பது என்ற இலக்கு நனவாகியுள்ளது. லின்சி பிரதேசத்தின் வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புப் பணியகத்தின் தலைவர் wangjie எமது செய்தியாளரிடம் கூறியதாவது:
"எங்கள் திட்டத்தில், தனிச்சிறப்புடைய 8 தொழில் மண்டலங்கள் இருக்கின்றன. மேற்கில், திபெத் பன்றி, யாக் எருது போன்ற கால் நடை வளர்ப்புத் தொழில் மண்டலம்; நடுப்பகுதியில் மாசற்ற காய்கறிகள் சீன மூலிகை மருந்து, தரமான பழவகை வளர்ப்பு மண்டலம்; தென்கிழக்கில் தலைசிறந்த பல்வகை தானியங்கள், நெல், காய்கறிகள் வளர்ப்பு மண்டலம்; இம்மண்டலங்களில் வாழும் மக்கள், 2006ம் ஆண்டில் குடும்பக்கணக்கில் மூவாயிரத்துக்கு மேலான யுவான் கூடுதலாகப் பெற்றுள்ளனர்" என்றார், அவர்.

தனிச்சிறப்புடைய வேளாண்மையின் வளர்ச்சிக்கு ஏற்ப, "மக்கள் நடத்தி, நிர்வகித்து, நலன் பெறுவது" என்ற கோட்பாட்டின் படி, லின்சி பிரதேசத்தில், "cuogao என்றும் இடத்தில் திபெத்பன்றி வளர்ப்புப்பொருளாதார அமைப்பு" "லின்சி என்ற இடத்தில், திபெத் கோழி வளர்ப்பு கூட்டுறவு பண்ணை" "jiadingga என்ற இடத்தில் விவசாயிகளின் காய்கறி பொருளாதார கூட்டுறவுச் சங்கம்" உள்ளிட்ட, விவசாயிகள் ஆயர்களின் தொழில்முறை ஒத்துழைப்புப் பொருளாதார அமைப்புகள் உள்ளூர் அரசின் வழிகாட்டலில் நிறுவப்பட்டுள்ளன. அன்றி, தனித்தன்மையுடைய வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புக்கான திட்டப்பணிகளை வாய்ப்பாகப் பயன்படுத்தி, வேளாண்மைக்கான நிதியைக்கொண்டு, உகந்த முறையில் இத்தனிச்சிறப்புடைய வேளாண்மைக்கும் கால் நடை வளர்ப்புக்கும் உதவு அளிக்கப்படுகின்றது. இப்போது, இது தொடர்பான பத்துக்கும் அதிகமான முன்னணி தொழில் நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. milin பண்ணை, caiou பண்ணை ஆகியவை இவற்றில் அடங்கும்.
கடந்த ஆண்டு, இச்சிறப்பியல்புடைய தொழில் திட்டப்பணிகள் பயிலும் மண்டலங்களில் 3900க்கும் அதிகமான விவசாயி குடும்பங்கள் நன்மை பெற்றுள்ளன. 22 ஆயிரம் விவசாயிகள் இதிலிருந்து நன்மை பெற்றுள்ளனர். தனித்தன்மையுடைய இவ்வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்பின் முன்னேற்றத்துடன் லின்சி பிரதேசத்தின் பல்வேறு தேசிய இன மக்களின் வாழ்க்கை மென்மேலும் மேம்படும் என நம்பப்படுகின்றது. 1 2
|