• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-11 12:18:03    
சுற்றுலா இடமான சுகந்த மலைப் பூங்கா

cri

சுகந்த மலைப் பூங்கா, பெய்ஜிங் வடமேற்கு புறநகரிலுள்ள மேற்கு மலைகளின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இப்பூங்கா, பெய்ஜிங் நகரிலிருந்து 20 கிலோமீட்டருக்கு மேலான தூரத்தில் இருக்கிறது. அங்குள்ள மலைகள், ஆறுகள், கண்கவர் காட்சிகளை அமைக்கின்றன. இந்த மேற்கு மலைகளுக்கு ஒரு முறை பயணம் செய்வது, நகரத்தின் இரைச்சலிலிருந்து மனதுக்கு இதமாக அமையும். இது, அமைதியான சோலைவனக் காட்சி. சிறப்புமிக்க மலைப் பூங்கா ஆகும். சுகந்த மலை, நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கு பல வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள் உண்டு. பல்வேறு வம்சக் காலங்களின் பேரரசர்கள், இங்கு மாளிகைகளையும் பூங்காகளையும் கட்டியெழுப்பியுள்ளனர். 1186ம் ஆண்டு, சுகந்த மலைக் கோயில் இப்பூங்காவில் கட்டியமைக்கப்பட்டது. அதற்குப் பின், யுவான், மிங், சிங் வம்ச காலங்களில், அது விரிவாக்கிக் கட்டியமைக்கப்பட்டது. 1745ம் ஆண்டு, சிங் வம்ச காலத்தின் பேரரசர் சியான் லோங் இதன் பெயரை அமைதிப் பூங்கா என மாற்றினார். அங்கு 28 காட்சிகள் இருக்கின்றன. துர் அதிஷ்டவசமாக, பிரிட்டன் மற்றும் பிராஞ்சு உள்ளிட்ட, எட்டு வல்லரசுகளின் படைகளால் சுகந்த மலை கடுமையாகக் குலைக்கப்பட்டது. அது, இடிபாடாக மாறியது. 1949ம் ஆண்டுக்கு முன், இப்பூங்காவில் பல தனியார் மாளிகைகள் அமைக்கப்பட்டன. அதன் பிறகு, சில பண்டைய காலத்தின் காட்சிகளைப் படிப்படியாகச் சீரமைத்து, பல கட்டிடங்களை அமைத்தனர். இவை எல்லாம், நீண்ட கால சுகந்த மலைக்கு, சிறப்பான அழகைத் தருகின்றன.
1 2