• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-11 12:18:03    
சுற்றுலா இடமான சுகந்த மலைப் பூங்கா

cri

கிழக்கு வாசலில் நுழைந்து, வளைந்து சுழிந்து செல்லும் பாதை ஒன்று, மலையின் மேலுள்ள அமைதியும் நேர்த்தியும் நிறைந்த சுவாங் சிங் மாளிகைக்கு இட்டுச் செல்கின்றது. சீன மொழியில் சுவாங் சிங் என்றால் இரு தெளிந்த நீரூற்றுகள் என்று பொருள். அங்குத் தெளிந்த நீரூற்றுகள் இரண்டு உள்ளன. இதனால், அது சுவாங் சிங் என்று அழைக்கப்படுகின்றது. நீரூற்றுகளின் அருகிலுள்ள செங்குத்தான பாறையில், சியான் லோங் பேரரசர் எழுதிய சுவாங் சிங் என்ற இரண்டு சீன எழுத்துகள் இருக்கின்றன. கோடைக்காலத்தில், இங்கு குளிர்ச்சியாக இருப்பதால் இது, வெப்பமான நேரங்களில் செல்லசிறந்த இடமாகும். மறைந்த தலைவர் மா சே துங், முன்பு இங்கு தங்கியிருந்தார்.

சுவாங் சிங் மாளிகையின் வடமேற்கில், சுகந்த மலைக் கோயிலின் பழைய இடம் இருக்கிறது. முன்பு, இங்கு ஐந்து அடுக்குக் கோயில்கள் இருந்தன. அவை, மலை உயர்வுக்கு ஏற்றபடி அமைந்து, பார்ப்பதற்குப் பிரமாண்டமானவை. ஆனால், தற்போது, இங்கு கற் துண்டுகளைப் போன்ற சிதிலங்கள் மட்டுமே உள்ளன.

பூங்காவின் மத்தியில், யூ ஹுவா மலைக் கிராமம் உள்ளது. ஆண்டுதோறும் இலையுதிர்காலப் பிற்பகுதியில், இங்குள்ள தென்கிழக்குப் பகுதி, சுமார் 1 லட்சம் செந்தளிர்களால் தீச் சுவாலைப் போல் காட்சியளிக்கிறது. சுகந்த மலையின் இவ்வழகான காட்சிகள், மக்களின் கண்களுக்கு நல் விருந்தாகும்.


1 2