• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-13 10:36:10    
மாசேதுங் சிந்தனை

cri
கலை.........வணக்கம் நேயர்களே. இன்றைய நிகழ்ச்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவரான சீனத் தலைவர் மாசேதுங்கின் சிந்தனை உள்ளிட்ட தகவல்கள் பற்றி தமிழன்பனுடன் நடத்திய உரையாடலை வழங்குகின்றோம்.

தமிழன்பன்.........கலை நான் சீனாவில் வேலை செய்வது இதுவே முதல் முறை. ஆகவே சீனா பற்றியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பற்றியும் மிகவும் குறைவாகவே அறிந்திருக்கின்றேன்.

 

கலை.......அப்படியா? நீங்கள் அறிய விருப்பப்படுப்பது பற்றி வினா எழுப்புங்கள்.

தமிழன்பன்........அப்படியானால் நான் முதலில் ஒரு கேள்வி கேட்கலாமா?

கலை........கேளுங்கள்.

தமிழன்பன்........மாச்சேதுங் சிந்தனை என்ன?

கலை...........இது பற்றி எளிதாக கூறிவிட முடியாது. மாச்சேதுங் சிந்தனை என்றால் மார்கஸிம் லெனினிசத்தின் பொதுமை தழுவிய கோட்பாட்டையும் சீனப் புரட்சியின் யதார்த்த நடைமுறைமையையும் இணைக்கும் படைப்பாகும். இது சீனாவில் மார்க்ஸிய லெனினித்தின் பயன்பாடு மற்றும் வார்ச்சியுமாகும்.

தமிழன்பன்........அப்படியிருந்தால் மாச்சேதுங் சிந்தனையின் அடிப்படை அம்சங்கள் என்ன?

கலை........இதில் முக்கியமாக மூன்று அம்சங்கள் உள்ளன.

தமிழன்பன்......அவை பற்றி விபரமாக கூறலாமா?

கலை.........விளக்கிக் கூற முயற்சிக்கிறேன்.

தமிழன்பன்.........சரி நல்லது.

கலை..........மாச்சேதுங் சிந்தனையில் 3 அடிப்படை பகுதிகள் உள்ளன. அதாவது நடைமுறைக்கு ஏற்ற உண்மையை நாடுவது, பொது மக்கள் நெறி, சுதந்திரம் மற்றும் தற்சார்பு என்பனவாகும்.

1 2