• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-13 10:36:10    
மாசேதுங் சிந்தனை

cri

தமிழன்பன்.....நடைமுறைக்கு ஏற்ற உண்மையை நாடுவது என்றால் என்ன?

கலை.......நடைமுறையிலிருந்து தொடங்கி மார்க்ஸிய லெனினிசத்தின் பொதுமை தழுவிய கோட்பாட்டை சீனப் புரட்சியின் நடைமுறையுடன் இணைப்பது என்று பொருள்.

 

தமிழன்பன்........அப்படியிருந்தால் பொது மக்கள் நெறி என்பதன் பொருள் என்ன?

கலை.......பொது மக்கள் நெறி என்றால் "எல்லாம் பொது மக்களுக்காக"எல்லாவற்றிலும் பொது மக்களை சார்ந்திருப்பதாகும். பொது மக்களிடமிருந்து கருத்துக்களை கேட்டு மீண்டும் அவற்றை மக்களிடையில் நடைமுறைப்படுத்துவதாகும்.

மைக்கல் .......அது சரி. சுந்திரம் என்பது எதை குறிக்கின்றது?

கலை......சுந்திரம் என்று கூறினால் சீனாவின் நடைமுறைக்கு ஏற்ப பொது மக்களை சார்ந்திருந்து புரட்சியிலும் கட்டுமானத்திலும் ஈடுபடுவதன் மூலம் பெற்ற இயல்பான முடிவாகும்.

தமிழன்பன்.........மாச்சேதுங் எந்த ஆண்டிலிருந்து சீனப் புரட்சியின் தலைவரானார்?

கலை........1893ம் ஆண்டில் பிறந்து 1976ம் ஆண்டு வரை வாழ்ந்த மாச்சேதுங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்துவர்களில் ஒருவராவார். நவ சீனாவின் முதலாவது தலைமுறை தலைவர்களில் மையத் தலைவரானார்.

தமிழன்பன்.........மாச்சேதுங் சிந்தனை பற்றி நாம் விவாதித்தோம்.

கலை.........ஆமாம். தலைவர் மா சீன மக்கள் நேசிக்கும் தலைவராகவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

தமிழன்பன்.........சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு பற்றி நீங்கள் எனக்காக விளக்கி கூறலாமா?

கலை........ நிச்சயம். அடுத்த முறை வினக்கி கூறுவேன்.


1 2