• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-18 08:51:00    
தியன் ஆன் மன் சதுக்கம்

cri
தியன் ஆன் மன் சதுக்கம், பெய்ஜிங் மாநகரின் மையப்பகுதியில் உள்ளது. தெற்கு முதல் வடக்கு வரையான அதன் நீளம், 880 மீட்டர். கிழக்கு முதல் மேற்கு வரையான அகலம், 500 மீட்டர் ஆகும். நிலப்பரப்பு, 4 லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டரை எட்டுகிறது. இதில் மாபெரும் கூட்டம் நடைபெற்றால், 10 லட்சம் பேர் கலந்து கொள்ள முடியும். தற்போது, இது, உலகிலுள்ள மிகப் பெரிய நகர மையப்பகுதியிலுள்ள சதுக்கமாகும். தியன் ஆன் மன் வாயில் கோபுரம், சதுக்கத்தின் வடக்குப் பகுதியில் இருக்கிறது. ஐந்து நட்சத்திரச் செந்நிறக் கொடி, சதுக்கத்தின் மேலே, உயரப் பறக்கிறது. மக்கள் வீரர் நினைவுச் சின்னம், சதுக்கத்தின் மையத்தில் அமைந்துள்ளது. சதுக்கத்தின் இரு பக்கங்களில், மக்கள் மாமண்டபம், சீனப் புரட்சி அருங்காட்சியகம், சீன வரலாற்று அருங்காட்சியகம் உண்டு. மா சே துங் நினைவு மண்டபம், Zheng Yang வாயில் ஆகியவை, சதுக்கத்தின் தென் பகுதியில் உள்ளன. நாள்தோறும், இங்கு வந்து பார்வையிடுவோரின் எண்ணிக்கை, மிகவும் அதிகம். தியன் ஆன் மன் சதுக்கம், புதிய பெய்ஜிங்கின் 16 முக்கிய காட்சிகளில் முதலிடம் வகிக்கிறது.
1 2