• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-18 08:51:00    
தியன் ஆன் மன் சதுக்கம்

cri

தியன் ஆன் மன் வாயில் கோபுரம்

தியன் ஆன் மன், பெய்ஜிங் மாநகரத்தின் கண். சீன மக்கள் குடியரசின் அடையாளமாகும்.

மிங் வம்சக்கால யோங் லெ 15ம் ஆண்டில், தியன் ஆன் மன் வாயில் கோபுரம் முதலில் அமைக்கப்பட்டது. மிங் வம்சக்காலத்தில், இது அரண்மனையின் முதன்மையான வாயிலாகும். அதைக் கட்டியமைக்கத் துவங்கிய போது, இங்கு ஐந்து மரத்தாலான வில்வளைவுகள் மட்டும் இருந்தன. பிறகு, ஒன்பது மாளிகைகளாக அவை திருத்தியமைக்கப்பட்டன. நவ சீனா நிறுவப்பட்ட பின், வாயில் கோபுரத்திலுள்ள மரக் கட்டிடங்களை சீன அரசு சீரமைத்து, சுவர்களை வலுப்படுத்தியது. மிங் மற்றும் சிங் வம்சக்காலங்களில், இது தடை செய்யப்பட்ட பகுதியாக மாறியது. 1911ம் ஆண்டில் சிங் வம்சம் கவிழ்க்கப்படும் முன், அரச குடும்பத்தினர் மற்றும் உயர் குடி மக்கள் மட்டுமே இங்கு வர முடியும். பொது மக்கள், இங்கு செல்லக் கூடாது. நாட்டில் பெரிய கொண்டாட்டங்கள் இருந்தால், இங்கு விழா நடத்தப்பட்டது. அதுவே இதன் முக்கிய பயன்பாடாக இருந்தது. தற்போது, நீங்கள் விரும்பினால் இந்தக் கோபுர வாயிலில் ஏறிப் பார்க்கலாம்.

மஞ்சள் நிற மெருகிடப்பட்ட ஓடுகள், செந் நிறத் தூண்கள் மற்றும் மேடைகள், வெள்ளை நிற சின்னம், கற் கைப்பிடிகள், கற் சிங்கங்கள், தங்க நீர் பாலம், ஆகியவை வாயில் கோபுரத்தில் உள்ளன. வண்ண வண்ணப் பொருட்கள், அழகான காட்சியை உருவாக்குகின்றன.

கம்பீரமுள்ள தியன் ஆன் மன், சீன மக்கள் குடியரசுடன் இணைந்து, புதிய விடியற்காலைகளை வரவேற்கிறது.


1 2