• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-19 19:52:52    
விவசாயிகள் மற்றும் ஆயர்களுடன் இணைந்து மகிழும் வூலான் முச்சி கலைக்குழு

cri

2007ஆம் ஆண்டு, சீனாவின் வட பகுதியிலுள்ள உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவாகவும், உள்மங்கோலியத் தனிச்சிறப்புமிக்க வூலான் முச்சி கலைக்குழு அமைக்கப்பட்ட 50வது ஆண்டு நிறைவாகவும் விளங்குகிறது. அண்மையில் எமது செய்தியாளர்கள் வூலான் முச்சியின் முன்னோடிகள், புதியவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து, உள்மங்கோலியாவின் வட பகுதியிலுள்ள புல்வெளியில் மறக்க முடியாத, மகிழ்ச்சியான ஒரு நாளை கழித்தனர்.

முலான் அம்மையார்

நீங்கள் கேட்டு கொண்டிருப்பது, நீலமான வானம் பற்றிய கவிதை என்ற பாடல். இப்பாடலைப் பாடியவர், உள்மங்கோலியாவில் அனைவருக்கும் தெரிந்த ஒருவராவர். வூலான் முச்சியின் முதல் தலைமுறை நடிகையும், புகழ்பெற்ற பாடகியும், உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நேரடியான நிர்வாகத்தின் கீழுள்ள வூலான் முச்சியின் முன்னாள் தலைவருமான முலான் அம்மையார் அவரே தான்.

ஒரு நாள், உள்ளூர் வூலான் முச்சியின் அரங்கேற்றத்துக்கு வழிகாட்டல் வழங்கும் பொருட்டு, வேலையிலிருந்து ஓய்வு பெற்ற முலான் அம்மையார், சிறப்பாக, உள்மங்கோலியாவின் தலைநகர் HU HE HAO TEவிலிருந்து, இப்பிரதேசத்தின் வட பகுதியில் அமைந்துள்ள WU LAN CHA BU நகரிலுள்ள SI ZI WANG மாவட்டத்துக்குச் சென்றார். வழியில், வூலான் முச்சி பற்றிய கதைகள் பலவற்றை அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

"அப்போது LE LE என்ற சக்கர வாகனம் ஓட்டி அல்லது குதிரை சவாரி செய்து, வீடு வீடாக சென்று ஆயர்களுக்கு கலை நிகழ்ச்சிகளை வழங்கினோம். சில சமயம் ஒரு திங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. மிகக் கடினமானது. ஆனால், இது பற்றி யாரும் புகார் செய்யவில்லை. 'எங்குள்ள ஆயர்களுக்கு நாங்கள் தேவைப்படுகிறோமோ, அங்கே தான் நாங்கள் செல்வோம். ஆயர்களுக்கு சேவை புரிவது எங்கள் திசை' என்ற விருப்பத்துடன், வசதியற்ற ஒதுக்குப்புற இடங்களுக்குச் சென்று, ஆடல் பாடல்களை அவர்களுக்கு வழங்குகின்றோம்" என்றார் அவர்.

வூலான் முச்சி கலைக்குழு

மங்கோலிய மொழியில் வூலான் முச்சி என்பது, சிவப்பு கலைக் குழு என்ற பொருள். புல்வெளியில் அடி நிலை கலை நிகழ்ச்சிக்குப் பொருந்திய சிறிய அரங்கேற்றக் குழு நிறுவப்பட்ட 50 ஆண்டுகளில், ஹாங்காங், மகௌ, தைவான் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு இடங்களுக்கும், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, ஒஷியானியா ஆகியவற்றிலுள்ள 50க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் சென்றுள்ளது. தற்போது, உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில், சுமார் 70 வூலான் முச்சி அரங்கேற்றக் குழுக்கள் உள்ளன. 2000க்கும் அதிகமான நடிகர்களும் பணியாளர்களும் அவற்றில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அடி நிலைப் பிரிவுகளில் அவர்கள் 5000க்கும் கூடுதலான கலை நிகழச்சிகளை வழங்குகின்றனர்.

பல ஆண்டுகளாக, உள்மங்கோலிய புல்வெளியில் வாழும் மக்கள் வூலான் முச்சி பற்றி குறிப்பிட்டதும், அவர்களை "எமது வூலான் முச்சி", அல்லது "எமது குழுந்தைகள்" என அன்புடன் அழைக்கின்றனர்.

1 2