
கலைக்குழுவின் உறுப்பினர்கள்
அன்று, SI ZI WANG மாவட்டத்தின் புல்வெளியில் வாழும் ஆயர் சுயிலாதுவின் வீட்டுக்கு வெளியே உள்ள இடம், இம்மாவட்டத்தின் வூலா முச்சி அரங்கேற்றும் இடமாக உறுதிப்படுத்தப்பட்டது. 63 வயதான மெங்கேன் சிசிகே அம்மையார், சுயிலாதுவின் தாயாவார். குழந்தை பருவத்தில் தொடங்கி, முலான் அம்மையார் உள்ளிட்ட, வூலான் முச்சியைச் சேர்ந்த முது பெரும் கலைஞர்களின் பாடல்களை அவர் கேட்க விரும்புகிறார். உள்மங்கோலிய தலைநகரிலிருந்து தொலை தூரத்திலுள்ள புல்வெளியில் தாம் விரும்பிய முலான் அம்மையாரை நேரில் கண்ட போது, மெங்கேன் சிசிகே அம்மையார் உணர்ச்சி வசப்பட்டார். அவர் கூறியதாவது—
"எமது வீட்டு வாசலில் வூலான் முச்சி இன்னும் அரங்கேற்றவில்லை. குறிப்பாக, புகழ்பெற்ற பாடகி எமது வீட்டுக்கு வருவது, எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி தருகிறது. முலான் அம்மையார் எளிமையானவர். ஆயர்களுடன் அவர் அன்பாக பழகுகிறார். அவரின் பாடல்களைக் கேட்க நான் மிகவும் விரும்புகின்றேன்" என்றார் அவர்.
அன்று அந்தி வேளையில், SI ZI WANG மாவட்டத்தின் வூலான் முச்சி கலைக் குழுவைச் சேர்ந்த 20 நடிகர்கள் ஆயர் சுயிலாதுவின் வீட்டுக்கு விரைவாக வந்தடைந்தனர். வாகனத்திலிருந்து இறங்கியதும் சுறுசுறுப்பாக வேலை செய்யத் துவங்கினர். சிலர் தாங்கள் கொண்டு வந்த மின்னாக்கி மூலம் மின்சாரத்தை உற்பத்தியாக்கினர். எளிமையான ஒரு அரங்கை உருவாக்குவதில் சிலர் ஈடுபட்டனர்.
வேறு சிலர், ஒலி மற்றும் விளக்குக் கருவிகளை சோதித்து சரிப்படுத்தினர். இவ்வாண்டு படிப்பு முடித்து SI ZI WANG மாவட்டத்தின் வூலான் முச்சியில் சேர்ந்த புதிய நடிகை தானா, முதல்முறையாக வூலான் முச்சியின் கலை நிகழ்ச்சியில் தாம் கலந்து கொள்வதால் உணர்ச்சி வசப்பட்டார்.
"ஆயர்களிடையில் நான் அரங்கேற்ற வருவது இதுவே முதல்முறை. மிகவும் உணர்ச்சி வசப்படுகின்றேன். ஆயர்களுக்காக கலை நிகழ்ச்சிகளை நடத்துவதில் எனக்கு பேரார்வம் உண்டு. ஆயர்கள் பாடுபட்டு உழைக்கின்றனர். அவர்களுக்காக பாடல்களை பாடுவதிலும், அவர்களின் சோர்வை நீக்குவதிலும் நான் மகிழ்ச்சி அடைவேன். விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கு சேவை புரிவதை தமது கடமையாக கொள்ளும் முக்கிய பணிக்கு கூடிய விரைவில் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்" என்றார் அவர்.

விவசாயிகள் மற்றும் ஆயர்களுடன் இணைந்து
முலான் அம்மையர் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும் அதே வேளை, தமது அருகிலுள்ள ரசிகர்களுடன் உரையாடினார். இளம் நடிகர்களுக்கு அரங்கேற்றம் பற்றிய மதிப்பீட்டையும் வழிகாட்டலையும் அவர் அவ்வப்போது வழங்கினார். அவர் கூறியதாவது—
"தற்போது வூலான் முச்சியைச் சேர்ந்த இளம் நடிகர்கள் பாடல் துறையில் உள்ளார்ந்த ஆற்றல் மிக்கவர்கள். நவீன பாடல் பாடுவதிலும் மங்கோலிய இன நீள் ராகம் பாடுவதிலும் ஈடுபாடு கொண்டவர்கள். பாடல் முறையின் பல்வகை தன்மை மிக நன்றாக உள்ளது" என்றார் அவர்.
ஆயர் சுயிலாதுவின் துணைவியார் கௌவா அம்மையாரும் ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்றவராவார். அன்று,வீட்டு வேலையை முடித்துக் கொண்ட அவர், அழைப்பின் பேரில், வூலான் முச்சியின் அரங்கில் ஊர் மக்களுக்கு மங்கோலிய இனப் பாடல் ஒன்றை பாடினார்.
கடந்த 50 ஆண்டுகளில், வூலான் முச்சி கலைக் குழுவினர் தலைமுறை தலைமுறையாக மாறியுள்ளனர். ஆனால், விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்காக முழுமூச்சுடன் சேவை புரியும் இக்கலைக் குழுவின் நோக்கம் ஒருபோதும் மாறவில்லை. 1 2
|