தமிழன்பன்.........கலை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம் செய்த அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணோட்டம் என்பது எதை குறிக்கின்றது.
கலை......அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணோட்டம் என்பது மக்களை பெரிதென கருதி பன்முகங்களிலும் ஒருங்கிணைந்த மற்றும் தொடர வல்ல வளர்ச்சியடையும் எண்ணமாகும்.
தமிழன்பன்.......அதன் நோக்கம் என்ன?
கலை.........2003ம் ஆண்டில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16 மத்திய கமிட்டியின் மூன்றாவது முழு அமர்வில் முன்வைக்கப்பட்ட இந்த கண்ணோட்டத்தில் நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் மிடையிலான வளர்ச்சி, மண்டலங்களுக்கிடையிலான வளர்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதார சமூக வளர்ச்சி, மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான இணக்கமான வளர்ச்சி, உள்நாட்டு வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணிக்கான கோரிக்கை ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக திட்டமிடுவதற்கு சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்படடுகின்றது.
தமிழன்பன்........மனிதரை பெரிதென கருதுவது என்பதற்கு என்ன பொருள்?
கலை........மக்களின் நலனை அனைத்து பணிகளுக்குமான அடிப்படை இலக்காக கருத வேண்டும். மக்களின் தேவையை நிறைவேற்றி மனித குலத்தின் முழுமையான வளர்ச்சியை தொடர்ந்து முழுமையாக்க வேண்டும்.
தமிழன்பன்.......இந்த வளர்ச்சி முன்னேற்ற போக்கில் எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
கலை........இத்துறையில் முதலில் சோஷ்லிச சந்தைப் பொருளாதார அமைப்பு முறையை தொடர்ந்து முழுமையாக்க வேண்டும் விரைவான ஒருங்கிணைப்பான சீரான பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தும் அதேவேளையில் அரசியல் மற்றும் தார்மீக நாகரீகத்தை விரைவுபடுத்த வேண்டும். பொருள் செல்வ நாகரீகம், அரசியல் நாகரிகம், தார்மீக நாகரீகம் ஆகியவை ஒன்றை ஒன்று முன்னேற்றி கூட்டாக வளரும் நிலைமையை உருவாக்க வேண்டும்.
1 2
|