• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-20 09:54:06    
அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணோட்டம்

cri

தமிழன்பன்.........கலை முழுமையான வளர்ச்சி பற்றி தெளிவாக விளக்கிக் கூறினீர்கள். அப்படியிருந்தால் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்று கூறும் போது, நகரங்களுக்கும் கிராப்புறங்களுக்குமிடையிலான வளர்ச்சி எந்த விதத்தில் இருக்க வேண்டும்?

கலை...... இந்த வளர்ச்சி ஒட்டுமொத்தரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டும். நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலும், மண்டலங்களுக்குமிடையிலும், வளர்ச்சி ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். பொருளாதார சமூகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி காணப்பட வேண்டும்.

தமிழன்பன்.......எனக்கு புரிந்தது. அதாவது தொடர வல்ல வளர்ச்சி என்று கூறினால் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான இணக்கமான வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக திட்டமிட வேண்டும்.

 

கலை.......ஆமாம். பொருளாதார கட்டுமானம் மக்கள் தொகை அதிகரிப்பு மூல வளப் பயன்பாடு மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பை நன்றாக கையாள வேண்டும்.

தமிழன்பன்........இந்த வரிசையான முயற்சிகளின் மூலம் முழுச் சமூகத்தை உற்பத்தி வளர்ச்சி, செழுமையான வாழ்க்கை, சீரான இயல்பான நாகரீக வளர்ச்சி ஆகியவை கொண்ட பாதைக்கு முன்னேற்ற முடியும். அப்படித்தானே.

கலை.......ஆமாம். அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணேட்டம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி புதிய நூற்றாண்டு காலக்கட்டத்தில் சீன வளர்ச்சி குறித்து முன்வைத்துள்ள முக்கிய நெடுநோக்குச் சிந்தனையாகும்.

தமிழன்பன்.......இன்று நாங்கள் முக்கியமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழு பற்றியும் அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணோட்டம் பற்றியும் விவாதித்தோம்.

கலை.........ஒரு முறை விவாதிப்பது போதாது. அல்லவா?

தமிழன்பன்........ஆமாம். ஆனால் இப்போது குறைந்தது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு பற்றியாவது அறிந்து கொண்டுள்ளேன். சீனாவிலான சீர்திருத்த மற்றும் வெளி நாட்டுத் திறப்புப் பணி பற்றியும் அறிந்து கொண்டுள்ளேன்.


1 2