• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-25 10:35:21    
கோடை மாளிகை

cri

ஈ ஹே யுவான் பூங்கா எனப்படும் கோடை மாளிகை, சீனாவின் சிங் வம்சக்காலத்தின் அரசக் குடும்பப் பூங்காவாகவும் அரண்மனையாகவும் விளங்கியது. அது, மூன்று மலைகள் ஐந்து பூங்காக்களில் இறுதியாகக் கட்டப்பட்ட பூங்கா. அது, 1764ம் ஆண்டு, கட்டியெழுப்பப்பட்டு, 290 ஹெக்டர் நிலபரப்புடையது. அதன் முக்கால் வாசிப் பகுதியை குன் மிங் ஏரி கொண்டுள்ளது.

1860ம் ஆண்டில் இரண்டாவது அபினிப் போரின் போது தீய் வாய்ப்பட்ட இந்தப் பூங்கா, 1866ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. 1900ம் ஆண்டில் இப்பூங்கா, எட்டு வல்லரசுகளின் படைகளால் சேதப்படுத்தப்பட்டது. பின்னர், 1902ம் ஆண்டு, மீண்டும் சீரமைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு முதல், 2006ம் ஆண்டு வரை, புத்தரின் நறு மண விதானமும் நீண்ட தாழ்வாரமும் மறு சீரமைக்கப்பட்டன.

நீண்ட ஆயுள் மலை, குன் மிங் ஏரி ஆகியன, கோடை மாளிகையை முக்கியமாக உருவாக்குகின்றன. இதில், முழு நாட்டு தோட்டக் கலைகளின் தலைசிறந்த பகுதிகள் இருக்கிறன. இதிலுள்ள 728 மீட்டர் நீளமான தாழ்வாரம் தனிச் சிறப்பு வாய்ந்து விளங்குகிறது. இத்தாழ்வாரமும் இதிலுள்ள ஓவியங்களும், மிக உயர்ந்த கலை மதிப்பைக் கொண்டு விளங்குகின்றன. தவிர, இத்தாழ்வாரம், இப்பூங்காவிலுள்ள பல்வேறு காட்சி இடங்களை இணைத்து, முழு பூங்காவின் அழகை வெளிப்படுத்துகிறது.

இப்பூங்காவின் மேற்கு அணைக்கட்டும், அணைக்கட்டிலுள்ள பாலங்களும், அதன் மற்றொரு தன்னிகரற்ற உருவரைப்பு ஆகும். முன்பு, மேற்கு அணைக்கட்டு, ஓர் அகலமற்ற கரையாக இருந்தது. உருவரைப்பாளர் இதை 6 பகுதிகளாகப் பிரித்து, ஆறு சிறு பாலங்களை அமைத்தார். இந்தக் காட்சியின் அழகு, ஹாங்சோவின் மேற்கேரி அணையின் அழகுக்கு ஈடானது.

1 2