• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-25 10:35:21    
கோடை மாளிகை

cri

குன் மிங் ஏரியின் தென் பகுதியில், ஒரு சிறிய தீவு இருக்கிறது. இதையும் ஏரியின் கிழக்குக் கரையையும் 17 வில் வளைவுகளைக் கொண்ட சலவைக்கல் பாலம் இணைக்கிறது.

பினேரிக் காட்சி, கோடை மாளிகையின் மூன்றாவது தனிச்சிறப்பு ஆகும். நீண்ட ஆயுள் மலையின் மூன்று பக்கங்கள் ஏரியால் சூழப்படுகின்றன. கண்டுகளிப்பு, சுற்றுலா, தீத் தடை ஆகிய மூன்று பயன்பாடுகள், பின் ஏரிக் காட்சிகளுக்கு உண்டு. தீத் தடையை பூங்காவின் வடிவமைப்புடன் திறமையாக இணைப்பது, அதன் சிறப்பியல்பு ஆகும்.

புத்தரின் நறு மண விதானம், முழு பூங்காக் கட்டிடங்களின் மையமாகும். தவிர, இப்பூங்காவில், முழு நாட்டிலுள்ள முக்கிய புகழ்பெற்ற காட்சி இடங்களின் வடிவமைப்புகள், செறிந்து காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக 17 வில் வளைவுகளைக் கொண்ட சலவைக்கல் பாலம், லூ கோ பாலத்தை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டது. பின் மலையின் சூ சோ வீதி, சூ சோ நகரின் வர்த்தக வீதியை மாதிரியாகக் கொண்டு கட்டியமைக்கப்பட்டது. நீண்ட ஆயுள் மலைக்குப் பின்னாலுள்ள சில கட்டிடங்கள், திபெத்தின் போதல மாளிகையை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டவை.


1 2