• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-24 16:24:15    
மனிதகுல மீட்சியின் விலை - ஹைச்ஐவி (HIV)

cri

நமது செந்தக்காரர்களாகிய குரங்குகளின் குரோமசோம்களைப் போலவே நமது முன்னோர்களிடமிருந்து வந்த நச்சுயிரிகளின் எச்சங்களாக PtERV என்ற ரெட்ரோ நச்சுயிரி நமது மரபணுத் தொகுதியில் உள்ளது. மூன்று நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே சிம்பேன்சி மற்றும் கொரில்லா வகை குரங்கினங்களில் இவை எளிதாக பரவியுள்ளன என இவ்வகை நச்சுயியை பற்றிய ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இருப்பினும், நமது முன்னோர்கள் இக்குரங்குகளுடன் ஆப்பிரிக்காவில் ஒரே வாழ்விடத்தை கொண்டிருந்தவர்கள் என்றாலும், மனித மரபணுத் தொகுதியில் இந்த PtERV காணப்படவில்லை.

வாஷிங்டன் சியேற்றிலுள்ள ஃபிரெடு ஹச்சின்சன் புற்றுறோய் ஆய்வு மையத்தில் நச்சுயிரியல் வல்லுனர் மைக்கிள் எமர்மேன் என்பவரின் தலைமையிலான குழு ஒன்று நடத்திய ஆய்வு அறிவியல் என்ற இதழில் வெளியானது. அவ்வாய்வில் மனித குரங்குகளை பாதித்த நச்சுயிரிகளிடமிருந்து நமது முன்னோர் எவ்வாறு தப்பித்தனர் என அக்குழு கண்டறிய முயன்றது.

சிம்பன்சியின் மரபணுக்களிலிருந்து பழைய நச்சுயிரியை உயிர்பிக்க செய்வதே அவ்வாய்வுக் குழுவின் நோக்கம். ஆனால் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட ரெட்ரோ நச்சுயிரிகளின் மாதிரி ஒவ்வொன்றும் கொஞ்சம் வேறுபட்டே இருந்தன. சில வார்த்தைகள் காலத்தால் மாற்றம் காண்பதைப் போல மில்லியன்கள் கணக்கான ஆண்டு காலத்தில் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட நச்சுயிரிகள் அனைத்தும் அவற்றின் பொதுத்தன்மையிலிருந்து வேறுபட்டன.

இந்நச்சுயிரியின் மூலத்தை, அதன் தொடர்ச்சியை உயிர்பிக்க மொழியியலாளர்கள் பயன்படுத்தும் பிரபலமான நுட்பத்தை இவ்வாய்வு நடத்திய அறிவியலாளர்கள் பயன்படுத்தினர். பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் பால் வேவ்வேறு வார்த்தைகளில் அழைக்கப்படுகிறது. இவ்வார்த்தைகளை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் பூர்வீக மொழியில் எந்த சொல் மிக அருகாமையில் வருகிறதோ அதைத்தான் மூலச்சொல்லாக கொள்வார்கள்.

பால் என்பது பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் முறையே லேயிட் (lait) லாத்தே (latte) மற்றும் லாக்கே (lache) என்று அழைக்கப்படுகிறது. மொழியியல் ஆராய்சியாளர்கள் இந்த மூன்றுக்கும் மூலச்சொல்லை கண்டுபிடிக்கும் போது லத்தீன் வார்த்தையான லாக்தே (lacte) என்ற சொல் மிக அருகாமையில் உள்ளதை கண்டறிந்து அதனை மூலச்சொல்லாக எடுத்துக்கொள்கின்றனர்.

அதே முறையை பின்பற்றி மூன்று மில்லியன் ஆண்டுகளான சிம்பன்ஸியின் மரபணுக்களிடமிருந்து நமது முன்னோர் உயிரணுக்களின் அடுக்கை நச்சுயிரி வல்லுனர்களால் கட்டி எழுப்ப முடிந்தது. பின்னர் அதில் எவ்வுயிரி இத்தகைய நோய் பரவுதலுக்கு காரணமாக அமைகிறது என அவர்கள் ஆய்வு செய்தனர்.

PtERV நச்சுயிரி TRIM5alpha என்ற புரதத்தால் அழிக்கப்படாமல் இருந்தால், விலங்குகளிடம் எளிதாக பரவியது. இப்புரதசத்து செல் என்ற உடல் நுண்ணறையின் வாயிற்காவலர் போல் செயல்படுகிறது. குரங்குகள் அல்லது மனிதர்களிடையே இப்புரதத்தை மீறி அந்த நச்சுயிரி நுழைய முடிகிறதா? என்பதை அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர்.

1 2 3