• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-24 16:24:15    
மனிதகுல மீட்சியின் விலை - ஹைச்ஐவி (HIV)

cri

அவர்கள் எதிர்பார்த்தது போலவே சிம்பன்சி குரங்குகளிடமிருந்து பெறப்பட்ட நச்சுயிரி, கொரில்லா குரங்கின் உடலிலான TRIM5alpha புரதத்தை மீறி பாதிப்பு ஏற்படுத்தியது. மனிதரிடம் இதை ஆய்வு செய்தபோது, நச்சுயிரியின் பெருக்கம் நூறு மடங்கு குறைந்ததை அறிவியலாளர்கள் கண்டனர். மனிதரின் TRIM5alpha என்ற புரதசத்து முற்காலத்திய நச்சுயிரிகளிடமிருந்து காக்க உதவியது என்றால், அவ்வாறே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நமது முன்னோர்களும் இந்நச்சுயிரியிடமிருந்து காக்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு ஆய்வுக்குழு வந்தது.

ஹைச்ஐவி நச்சுயிரி PtERV ரெட்ரோ நச்சுயிரியின் குடும்பத்தை சார்ந்ததே. எனவே TRIM5alpha புரதசத்து எயிட்ஸ் என்ற தேய்வு நோயின் நச்சுயிரியை தடுக்கிறதா? என கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் ஆர்வம் காட்டினர். அப்போது தான் தற்கால மனித TRIM5alpha, PtERV நச்சுயிரியை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் ஹைச்ஐவி நச்சுயிரியை பரவாமல் தடுக்க இப்புரதசத்தால் முடியவில்லை என்று கண்டறிந்தனர். இதற்கு நேர்மாறாக, குரங்குகளின் TRIM5alpha புரதசத்து ஹைச்ஐவி பரவலை தடுத்து PtERV நச்சுயிரியை அனுமதித்தது. இத்தகைய செயல் ஒரு வாயில் மூடப்படும்போது இன்னொரு வாயில் திறக்கப்படும் என்று சொல்வது போல் இருக்கிறது.

மூன்று நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் PtERV நச்சுயிரி நமது முன்னோர்கள் உள்பட ஆப்பிரிக்க குரங்குகளிடம் தொற்றியது. நமது முன்னோரில் யாரோ ஒருவருக்கு ஏற்பட்ட தற்செயலான மரபணுமாற்றம் தான் கண்டம் முழுவதும் பரவிய இந்நச்சுயிரியின் கொடூரமான பாதிப்பிலிருந்து நமது முன்னோர் எதிர்ப்பு சக்தி பெற உதவியது என மைக்கேல் எமர்மேன் குழுவினர் எண்ணுகின்றனர். இம்மரபணுமாற்றம் மறைவான ஒரு விலையோடு வந்தது போல. அத்தகைய மாற்றம் நமது முன்னோர்களை அழிவிலிருந்து பாதுகாத்து காப்பாற்றி இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டில் ஹைச்ஐவி நச்சுயிரின் பாதிப்பு ஏற்பட அதுவே காரணமாக அமைந்தது எனலாம். முந்தைய நச்சுயிரியின் பாதிப்பிலிருந்து காப்பாற்றிய அந்த மரபணு புதிய நச்சுயிரிக்கு எதிரான பாதுகாப்பை வழங்கவில்லை. எயிட்ஸ் என்ற தேய்வு நோயை முற்காலத்திய வாழ்வு மீட்சி கடனுக்கு மனித குலம் செலுத்தும் விலையாகவே கொள்ள வேண்டியுள்ளது. பரிணாம வளர்ச்சியிலிருந்து மனிதகுலம் தப்பிக்க முடியாது எனவும் தெரிகிறது.

அழிவு இயற்கையின் ஒரு பகுதியே. அழிவும், புது ஆக்கமும் பரிணாம வளர்ச்சியின் முக்கிய கூறுகள் என்பது வாழ்வில் கண்கூடு.

ஃபீனிக்ஸ் பறவை எரிந்து சாம்பலானாலும் மீண்டும் உயிர் பெற்றெழும்.

மடியும் விதை புதிய மரமாக முளைக்கும்.

மறையும் ஆதவன் விடியலின் தொடக்கம்.

அழிதலில் ஏற்படும் புது வாழ்வை காட்டும் சாட்சிகள் இவைகள்.


1 2 3