வாணி -- க்ளீடட்ஸ், வழக்கம் போல வகுப்பின் துவக்கத்தில் நேயர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கிறோம்.
க்ளீட்டஸ் -- சரி. கடந்த வகுப்பில் நாங்கள் தொடர்வண்டி சீட்டுகளை வாங்குவது பற்றிய4 வாக்கியங்களைக் கற்றுக்கொண்டோம்.
வாணி -- என்னைப் பின்பற்றி வாசியுங்கள். 我买一张十三次的车票。wo mai yi zhang shi san ci de che piao. mai 买, வாங்குவது, 张, zhang, சீன மொழியில்சீட்டு விகுதி. 次 ci, தொடர் வண்டியின் எண்ணுக்கு பிந்திய விகுதி. 我买一张十三次的车票。wo mai yi zhang shi san ci de che piao.
க்ளீட்டஸ் -- 我买一张十三次的车票。wo mai yi zhang shi san ci de che piao. நான் 13வது தொடர் வண்டிக்கான ஒரு சீட்டை வாங்குகின்றேன்.
வாணி -- 多少钱? duo shao qian?
க்ளீட்டஸ் -- 多少钱? duo shao qian? எவ்வளவு?
வாணி -- 四百九十元。 si bai jiu shi yuan.
க்ளீட்டஸ் -- 四百九十元。 si bai jiu shi yuan. 490 யுவான்.
வாணி -- 找您十元钱。 zhao nin shi yuan qian. 找,zhao, என்பது, திரும்பி கொடுப்பது, give change. 找您十元钱。 zhao nin shi yuan qian.
க்ளீட்டஸ் -- 找您十元钱。 zhao nin shi yuan qian. உங்களுக்கு 10 யுவான் திரும்பிகொடுக்கின்றேன்.
வாணி – 去多长时间?qu duo chang shi jian?
க்ளீட்டஸ் --去多长时间?qu duo chang shi jian? எத்தனை நாட்களாக?
க்ளீட்டஸ் – கடந்த வாரம் நாங்கள் b என்ற முதல் ஒலியைக் கற்றுக்கொண்டுள்ளோம்.
வாணி – சரி. சீன மொழியில் ஒவ்வொரு எழுத்தை வாசிக்கும் போதும் முதல் ஒலி, இறுதி ஒலி, தொனி ஆகியவற்றைச் சேர்ந்து பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, எடுத்துக்காட்டாக, 我,நான். இதன் முதல் ஒலி,w , இறுதி ஒலி,o, 3வது தொனி. w-o, wo
க்ளீட்டஸ் -- w-o, wo, 我, நான்.
வாணி -- நல்லது. b-a,4வது தொனி, baba, 爸爸, அப்பா.
க்ளீட்டஸ் -- b-a,4வது தொனி, baba, 爸爸, அப்பா.
வாணி – இப்போது புதிய வகுப்பைத் துவக்கலாம். பயணம் பற்றிய உரையாடலைக் கற்றுக்கொள்வோம். முதலில், 你们星期几去旅行? 你们,நீங்கள், 星期几,எந்த நாள், 旅行, பயணம் செய், 你们星期几去旅行?ni men xingqi ji qu lv xing ?
க்ளீட்டஸ் --你们星期几去旅行?ni men xingqi ji qu lv xing ? நீங்கள் எந்த நாள் பயணம் செய்வீர்கள்?
1 2
|