வாணி – மீண்டும் ஒரு முறை. 你们星期几去旅行? ni men xingqi ji qu lv xing ?
க்ளீட்டஸ் --你们星期几去旅行?ni men xingqi ji qu lv xing ? நீங்கள் எந்த நாள் பயணம் செய்வீர்கள்?
வாணி – 星期四。xing qi si.
க்ளீட்டஸ் --星期四。xing qi si. வியாழக்கிழமை.
வாணி – மீண்டும் ஒரு முறை. 星期四。xing qi si.
க்ளீட்டஸ் --星期四。xing qi si. வியாழக்கிழமை.
வாணி – 去多长时间?qu duo chang shi jian?
க்ளீட்டஸ் --去多长时间?qu duo chang shi jian? எத்தனை நாட்கள்?
வாணி – மீண்டும் ஒரு முறை. 去多长时间?qu duo chang shi jian?
க்ளீட்டஸ் --去多长时间?qu duo chang shi jian? எத்தனை நாட்கள்?
வாணி – இப்போது, உச்சரிப்பு நேரம். க்ளீட்டஸ், கடந்த வாரம் நாங்கள், b என்ற முதல் ஒலியைக் கற்றுக்கொண்டுள்ளோம்.
க்ளீட்டஸ் – ஆமாம்.
வாணி – இன்று தொடரந்து கற்றுக்கொள்வோம். முதலில், p
க்ளீட்டஸ் – p
வாணி – தமிழ் உச்சரிப்பில் இல்லாதது. கவனமாகக் கேட்டு மீண்டும் வாசியுங்கள். P
க்ளீட்டஸ் – P
வாணி – என்னுடன் பயிற்சி செய்யுங்கள். P-à , hai pa, பயங்கரம்.
க்ளீட்டஸ் -- P-à, hai pa, பயங்கரம்.
வாணி – கடந்த வாரத்தில் கற்றுக்கொண்ட b-a உடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. baba, 爸爸 , என்பது அப்பா. hai pa, என்பது பயங்கரம்.
க்ளீட்டஸ் -- baba, 爸爸, hai pa 害怕。இங்கே எனக்கு கொஞ்சம் குழப்பம்.
வாணி – பரவாயில்லை. P வாசிக்கும் போது, வாயிலிருந்து காற்றை வெளியேற்ற வேண்டும்.
க்ளீட்டஸ் -- வகுப்புக்குப் பின் b , P ஆகிய 2 ஒலிகளுடன் நன்றாக பயிற்சி செய்வேன்.
வாணி – நல்லது. அன்புள்ள நேயர்களே, நீங்களும் க்ளீட்டஸ் போல் அதிகம் பயிற்சி செய்யுங்கள். சரி, இன்றைய தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவுறுகின்றது. நண்பர்களே, அடுத்த வாரம் சந்திப்போம். 朋友们,下星期见。
க்ளீட்டஸ் – இங்கே, p-eng, you, இன்று கற்றுக்கொண்ட p பயன்படுத்தப்பட்டது, சரி தானே?
வாணி – சரி தான். 1 2
|