• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-09 17:08:49    
அரண்மனை அருங்காட்சியகம்

cri

பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம், தடை செய்யப்பட்ட நகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இது, பெய்ஜிங் மாநகர மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது, மிங் மற்றும் சிங் வம்சக் காலத்தின் அரண்மனையாகும். மிங் வம்சக் காலத்தின் பேரரசர் ஜூடி, முழு நாட்டிலும் திறமை வாய்ந்த தொழில் நிபுணர்களைத் திரட்டி அனுப்பினார். அவர்கள், நாஞ்சிங் அரண்மனையை மாதிரியாகக் கொண்டு, 14 ஆண்டுகாலம் பணியாற்றி, இதனை கட்டியமைத்தனர். இதன் மட்டம், செவ்வகமாக இருக்கிறது. தெற்கு முதல், வடக்கு வரையான அதன் நீளம், 961 மீட்டர். கிழக்கு முதல் மேற்கு வரையான அகலம், 753 மீட்டர் ஆகும். நிலப்பரப்பு ஏறக்குறைய 7 லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டராகும். இந்நகரைச் சுற்றி சுவர் ஒன்று அமைந்துள்ளது. அதன் வட்டத்தின் சுற்றளவு, 3428 மீட்டர் ஆகும். சுவரின் உயரம், 7.9 மீட்டர். அதன் அடிப்பகுதியின் அகலம், 8.62 மீட்டர் ஆகும். மேல் பகுதியின் அகலம், 6.66 மீட்டர். நகரச் சுவரின் நான்கு முனைகளிலும், ஒரு அழகான முனை கோபுரம் இருக்கிறது. இந்நகரத்தின் வெளியே, ஒரு 52 மீட்டர் அகலமான, 3800 மீட்டர் நீளம் கொண்ட நகர் காப்பு ஆறு வளைந்து ஓடுகிறது. அவை, முழுமையான பாதுகாப்பு முறைமையை அமைக்கின்றன. இந்த அரண்மனையில் நான்கு வாயில்கள் உண்டு. தெற்குப் பகுதியில், வூ வாயில், வடக்குப் பகுதியில் ஷீன்வூ வாயில், கிழக்குப் பகுதியில் தூங்ஹுவா வாயில், மேற்குப் பகுதியில் சீஹுவா வாயில் ஆகியவை இருக்கின்றன.
1 2