• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-11 13:43:56    
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பங்கு

cri

தமிழன்பன்.......இன்றைய நிகழ்ச்சியில் சீனக் கம்யூனிஸ்ட்ட் கட்சி பற்றி என்ன விவாதிக்க போகின்றோம்?

கலை.......சீனக் கம்யூனிஸ்ட்ட் கட்சி சோஷலிசக் கட்டுமானத்தில் சீன மக்களுக்குத் தலைமை தாங்கி ஆட்சி புரியும் கட்சியாக விளங்குகின்றது.

தமிழன்பன்.......ஆமாம். சீனா பல்வேறு துறைகளின் கட்டுமானத்தில் பெற்றுள்ள முன்னேற்றங்களை பார்த்தால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவச் செல்வாக்கு இதிலிருந்து பிரிக்கப்பட முடியாதது. அப்படியிருந்தால் கம்யூனிஸ்ட் கட்சி இல்லையென்றால் நவ சீனா நிறுவப்பட்டிருக்க முடியாது என்ற கருத்து பற்றி நிலுவும் சந்தேகம் குறித்து நீங்கள் விளக்கிக் கூறுவீர்களா?

கலை.........கூறலாமே. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவபடுவதற்கு முன், 1840ம் ஆண்டில் அப்பினி போருக்குப் பின் சீனா மிக வறுமையான அரை காலினிச அரை நிலபிரபுத்துவ நாடாக இருந்தது. அப்போது சீனா"கீழை நோயாளி" என அழைக்கப்படது.

தமிழன்பன்.......சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1921ம் ஆண்டில் நிறுவப்பட்ட பின் சீனாவில் என்ன மாற்றம் ஏற்பட்டது?

கலை.......சீனக் கம்யூனிஸ்ட்ட் கட்சி 1921ம் ஆண்டில் நிறுவப்பட்டமை சீனாவின் அண்மைய வரலாற்றில் முன்கண்டிராத மிகப் பெரிய விடயமாகும். அப்போது முதல் சீனாவின் வளர்ச்சி திசை மாறியது.

தமிழன்பன்........சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீனாவில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டது?

கலை........28 ஆண்டுகாலம் கடினமாக போராடிய பின் சீன மக்கள் உரிமையாளர்களாகி நவ சீனாவை நிறுவியுள்ளனர்.

1 2