தமிழன்பன்.......கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக சீனா பாகுபாடு செய்யப்பட்ட வரலாறு முடிவுக்கு வந்தது.
கலை.......ஆமாம். சீனா வரலாற்று தன்மை வாய்ந்த முன்னேற்றம் அடைந்துள்ளது.
தமிழன்பன்........கலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீன மக்கள் எத்தகைய முன்னேற்றம் அடைந்துள்ளனர்? இது பற்றி எடுத்துக்காட்டுடன் கூறமுடியுமா?
கலை........சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீன மக்கள் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை மேற்கொள்ளும் அதேவேளையில் நாட்டின் செழுமையையும் வலிமையையும் நனவாக்கியுள்ளனர். அத்துடன் மக்கள் கூட்டாக செழுமைப்படும் சீனத் தனிச்சிறப்பியல்பு மிக்க சோஷலிசத்தை சீன மக்கள் உருவாக்கியுள்ளனர்.
தமிழன்பன்.......சீன மக்களின் முயற்சிகளின் மூலம் சீனச் சமூகத்தின் உற்பத்தியாற்றல், ஒட்டுமொத்த தேசியத் திறன், மக்களின் பொருளியல் மற்றும் பண்பாட்டு வாழ்க்கை ஆகியவற்றின் தரம் பெருமளவில் உயர்ந்துள்ளது.
கலை.........ஆமாம். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீன மக்கள் அமைதியுடன் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் ஏற்பட்ட சிக்கலான நிலைமைகளைக் கையாண்டுள்ளனர். கடும் ஆபத்தை சமாளித்து நிர்பந்தத்தை எதிர்த்து நின்று சோஷலிச சீனாவை உலகின் கிழக்கில் நிலைநிறுத்தச் சீன மக்கள் செயல்பட்டுள்ளனர்.
தமிழன்பன்.......கலை நீங்கள் சொன்னது உண்மைதான். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சீனாவில் உற்சாகமான உயிராற்றல் உலக மக்களின் பார்வைக்கென காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கலை........சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டு வளர்ந்து வலுபட்டதுடன் சீனா பாகுபாடு செய்யப்பட்ட வரலாறு மலையேறி விட்டது.
தமிழன்பன்........நீங்கள் விளக்கிய பின் சீனக் கம்யூனிஸ்ட்ட் கட்சி இல்லையென்றால் நவ சீனா இல்லை என்ற கருத்து நன்றாக புரிந்தது. 1 2
|