• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-11 14:25:19    
வீதியைக் குறுக்கே கடக்கும் மிக அகலமான மேற்பாலம்

cri

சீனாவில், பெய்ஜிங் மாநகரத் தொடர் வண்டி நிலையத்திற்கு முன்னாலுள்ள வீதியைக் குறுக்கே கடக்க, அதன் கிழக்கு மேற்கு பக்கங்கள் ஒவ்வொன்றிலும் மேற்பாலம் ஒன்று செப்டம்பர் 28ஆம் நாளன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் கிழக்கு மேற்பாலத்தின் அகலம் 10 மீட்டர். சீனாவில் வீதியைக் குறுக்காகக் கடக்கும் மிக அகலமான மேற்பாலம் இதுவே. மேற்கு மேற்பாலத்தின் இரு கோடிகளிலும் தலா 2 மின் ஏணிப் படிக்கட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இம்மேற்பாலங்களில், தானியங்கி நீரிறைப்பான், பனிக்கட்டி அகற்றுவான் போன்ற நவீன பொறிகள் பொருத்தப்பட்டுள்ளன. புயல் மழை மற்றும் கடும் குளிர்காலங்களிலும் அவை இயல்பாக இயங்கக் கூடியவை.

வீதியைக் குறுக்கே கடக்கும் இம்மேற்பாலங்கள் பயன்படுத்தப்படுவதால், கிழக்கே மேற்காக ஓடிச்செல்லும் வண்டிகளும் மேற்பாலங்கள் மூலம் தெற்கே வடக்காக நடந்து செல்லும் மக்கள் கூட்டங்களும் பயனுள்ள முறையில் பிரிக்கப்படுகின்றன. பெய்ஜிங் தொடர் வண்டி நிலையப் பகுதியிலான போக்குவரத்து நெரிசல் பெரிதும் தணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

உலகில் மிக நீளமான கால்ஃபு

பந்தாட்ட வழித்தடம்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அமைப்பு ஒன்று, உலகில் மிக நீலமான கால்ஃபு பந்தாட்ட வழித்தடத்தைக் கட்டியயமைக்கத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, 1200 கிலோமீட்டர் நீளமுடைய இந்தக் கால்ஃபு வழித்தடம் பரந்து விரிந்த பாலைவனத்துக்கும் ஒதுக்குப்பறச் சுரங்கங்களுக்கும் ஊடாகச் சென்று, பாதியளவு ஆஸ்திரேலியாவைக் குறுக்கே தாண்டும். 18 குழிகள் கொண்ட இக்கால்ஃபு பந்தாட்ட வழித்தடத்தில் ஆஸ்திரேலியாவின் தெற்கு சமவெளியில் அமைந்துள்ள எல் நெடுஞ்சாலையின் நெடுகிலுமுள்ள ஒவ்வொரு நகரிலும் ஒரு குழி நிறுவப்படும்.

ஆர்ஃபு காபுடோ என்பவர், இத்திட்டத்தை வகுத்தவர். எல் நெடுஞ்சாலை மேலாண்மையாளர் சங்கத்தைச் சேர்ந்த அவர், இத்தகைய கால்ஃபு பந்தாட்ட வழித்தடத்தைக் கட்டியமைப்பதன் மூலம் மேலும் அதிகமான மக்களைச் சுற்றுலா அணியில் சேர்க்க விரும்புகிறார். இதன் மூலம் அங்குள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

1 2