• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-11 14:25:19    
வீதியைக் குறுக்கே கடக்கும் மிக அகலமான மேற்பாலம்

cri

இதுவரை, 4 பந்து குழிகள் பயன்படத் துவங்கியுள்ளன. 2008ஆம் ஆண்டின் நடுவில் 18 குழிகளின் கட்டுமானமும் நிறைவடையும். இத்திட்டப்பணிக்கான செலவு, 8 லட்சம் ஆஸ்திரேலிய டாலராகும்.

இத்திட்டப் பணிக்கு 3 லட்சத்து 31 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலரை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்று இந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் செப்டம்பர் 18ஆம் நாள் அறிவித்தார்.

நடத்தைப்பிழையுள்ள இளைஞர்களுடன்

உடன்படிக்கை

சமூகக் குற்றச் செயல்களைக் குறைக்கும் பொருட்டு, பிரிட்டிஷ் காவற்துறை, நடத்தைப்பிழையுடைய இளைஞர்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளது.

இவ்வுடன்படிக்கையின் படி எவராவது ஒரு இளைஞர், சட்டத்தை மீறி நடந்தால், அரசின் தண்டனைக்குள்ளாகாமல் தவிர்க்கப்படலாம்.

அரசு வழங்கிய இவ்வுடன்படிக்கையின முக்கிய உள்ளடக்கங்களில், தீ வைக்கக் கூடாது;வழிப் போக்கர்களைத் திட்டக் கூடாது;சுவரில் கண்டபடி வரையக்கூடாது; சொத்தக்களைக் சீர்குலைக்கக் கூடாது;குடியிருப்புக் கட்டடங்கள் மீது அல்லது வழிப் போக்கர்கள் மீது கல் எறியக் கூடாது; வீட்டுக்கூரையில் அல்லது மின் ஏணியின் உச்சியில் ஏறக் கூடாது என்பன இடம்பெறுகின்றன. அத்துடன், உடன்படிக்கையில் கையொப்பமிட்ட 6 திங்களுக்குள், எவராவது ஒருவர் இதை மீறி நடந்தால், தண்டிக்கப்பட மாட்டார். எனினும், வன்செயல் குற்றவாளிகள், உடன்படிக்கையின் தொடர்புடைய விதிகளைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.

பிரிட்டனில், இதுவரை 25 ஆயிரம் இளைஞர்கள் இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர். உடன்படிக்கைக்கு ஏற்றவர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி, மேலும் அதிகமானோரை அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் உள்துறை அனமச்சகம் விருப்பம் தெரிவிததுள்ளது.

நீருக்கடி விருந்து

நீரில் மூழ்கும் ஆட்டத்தில் பேரார்வமுடைய 500 பேர், செப்டெம்பர் 22 ஆம் நாள் லண்டனின் மேற்கு புறநகரிலுள்ள பூங்கா பொழுதுபோக்கு மன்றத்தில் ஒன்று கூடினர். அவர்கள் நீர்முழ்கிக் கவசமணிந்து நீருக்குக் கீழே 1.2 மீட்டர் ஆழத்தில் 3 கறிகளுடன் கூடிய விருந்தினை உண்டு மகிழ்ந்தனர். மிகப்பெரிய நீருக்கடி விருந்து என்ற கின்னஸ் உலகக் காதனையை முறியடித்து, அறக் கட்டளை திரட்டும் நோக்கத்துடன், இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.


1 2