• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-12 12:37:15    
தலைமுறை தலைமுறையாக பரவி வரும் மங்கோலிய இன நீள்ராகம்

cri

இன்றைய நிகழ்ச்சியில், உள் மங்கோலியப் புல்வெளியில், நீள்ராகம் மீதான மங்கோலிய இன ஆயர்களின் அன்புணர்வை நீங்கள் உணரலாம்.

 
இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, Modege அம்மையார் பாடிய நீள்ராகப் பாடலாகும். உள்மங்கோலிய புல்வெளியில், Modege அம்மையார், நீள்ராகத்தைப் பாடுவதில், மிகவும் தேர்ச்சி பெற்ற மங்கோலிய இனப் பாடகர்களில் ஒருவர் ஆவார். 75 வயதான போதிலும், அவர் நீள்ராகத்தில் பாடுவதில், இன்னமும் உற்சாகம் காணப்படுகிறது. அவர் பாடும் பாடலில் கலை நுட்பம் ஆழ்ந்து காணப்படுகின்றது.
காலம் சென்ற தலைமையமைச்சர் Zhou En Lai முதலிய சீன மூத்த தலைவர்கள், Modege அம்மையாரைச் சந்தித்துரையாடினர். அழைப்பிற்கிணங்க, சீனாவின் பல்வேறு இடங்களில் அவர் நீள்ராகப் பாடல்களை பாடினார். 2004ஆம் ஆண்டு, சீனப் பண்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலை வளர்ச்சி மையத்தால், "நாட்டுப்புறப் பாடகராக" அவர் சிறப்பாக அமர்த்தப்பட்டுள்ளார். அவர் பாடும் நீள்ராகப் பாடல்கள், உலகில் தலைசிறந்த பாடல்கள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.
நீள்ராகப்பாடல், வாழ்க்கை மற்றும் இயற்கை மீதான எளிமையான உணர்வை வெளிப்படுத்தும் பாடலாக, பன்னாட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புல்வெளியில், Modege அம்மையாரை விரும்பும் மக்கள் அதிகமாக இருக்கின்றனர். Chaganf அம்மையார், அவர்களில் ஒருவராவார். Modege அம்மையார் குறித்து, அவர் கூறியதாவது:
"ஆசிரியர் Modege அம்மையார், தனித்தன்மை வாய்ந்த பாடகி ஆவார். ஒலி உள்ளிட்ட பலவற்றில், அவர் மிகவும் சிறந்தவர்" என்றார், அவர்.
49 வயதான Chaganf அம்மையார், ஓய்வு பெற்றப் போதிலும், உள் மங்கோலியாவில் நடைபெறும் பண்பாட்டுத் தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். மங்கோலிய நாட்டிலும், அரங்கேற்றங்களில் அடிக்கடி பங்கெடுக்கின்றார். தவிர, அவர், அடிக்கடி மேய்ச்சல் பிரதேசங்களுக்குச் சென்று, உள்ளூர் ஆயர்களிடமிருந்து நீள்ராகம் பாடுவதைக் கற்றுக்கொண்டு, தலைசிறந்த நீள்ராகப் பாடல்களைச் சேகரித்து, சீர்ப்படுத்துகின்றார். அவரைப் பொறுத்த வரை, இக்கலையைச் செவ்வனே பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு இதை கையேற்றுவது, மிகவும் முக்கியமான பணியாகும்.


2005ஆம் ஆண்டு, "நீள்ராகம்", ஐ.நாவின் யுனெஸ்கோவால், "வாய் மூல பொருள் சாராப் பண்பாட்டு மரபுச்செல்வத்தின் பிரதிநிதிப்படைப்பு" என உறுதிப்படுத்தப்பட்டது முதல், இக்கலையில் மேலும் பெரும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், Chaganf உள்ளிட்ட புகழ் பெற்ற நீள்ராகப் பாடகர்கள், நீள்ராகப்பாடல் வகுப்பை நடத்துகின்றனர். Xilin Guole நிர்வாக பிரதேசத்தின் பல பள்ளிகளில், நீள்ராகம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. Chaganf கூறியதாவது: 
"2005ஆம் ஆண்டு முதல், Dong Wuzhumuqin மாவட்டத்தின் பள்ளிகளில் நீள்ராகம் கற்பிக்கப்படுகின்றது. இவ்வாண்டு, Xilin Hot நகரில் நீள்ராக வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. நீள்ராகம், பொருள் சாரா பண்பாட்டு மரபுச்செல்வம் என உறுதிப்படுத்தப்பட்டப் பின், இதற்கு பெரும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது" என்றார், அவர்.

1 2