• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-12 12:37:15    
தலைமுறை தலைமுறையாக பரவி வரும் மங்கோலிய இன நீள்ராகம்

cri

தமது மாணவர்கள் பற்றி குறிப்பிடுகையில், Chaganfவின் முகத்தில் புன்னகை தோன்றியது. அவர் கூறியதாவது:
"அவர்கள், ஆயர்களின் குழந்தைகள். சிறு வயதிலிருந்தே, நீள்ராகப் பாடல்களைக் கேட்டு, வளர்ந்துள்ளனர். மிக வயதான மாணவருக்கு 20 வயதாகும். இப்போது, அவர்கள் அடிக்கடி அரங்கேற்றி, நீள்ராகப் பாடல்களைப் பாடுகின்றனர். அவர்களில், சிலர், வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார்கள். தற்போது, பள்ளிகளில் நீள்ராகம் சொல்லிக்கொடுக்கப்படுவது என்பது நன்றாக இருக்கின்றது" என்றார், அவர்.
2007ஆம் ஆண்டின் கோடைக்கால விடுமுறை நாட்களில், Chaganf அம்மையாரை நாங்கள் கண்டோம். மாணவர்களைப் பொறுத்த வரை, விடுமுறை நாட்கள், கலையைக் கற்றுக்கொள்ளும் நல்ல நேரமாகும். Chaganfவின் மாணவர்கள், இக்காலத்தில், மேய்ச்சல் பிரதேசங்களுக்குத் திரும்பி, தத்தமது குடும்பத்தினர்களுக்கு உதவி செய்கின்றனர். மேய்ச்சல் பிரதேசத்து வாழ்க்கையுடன் அவர்கள் மேலும் பழகுவதன் மூலம், நீள்ராகப் பாடல்களின் உள்ளடக்கத்தை மேலும் நன்றாக புரிந்து கொள்வதும் தான் தமது நோக்கமாகும் என்று Chaganf கூறினார்.


தற்போதைய சீனாவில், பழமைவாய்ந்த நீள்ராகப் பாட்டுக் கலை படிப்படியாக அழிக்கப்படுகின்றதா? Xilin Goule நிர்வாகப் பிரதேசத்தில் உள்ள கலை புத்தாக்க ஆய்வு மையத்தைச் சேர்ந்த கலை விமர்சகர் Wei Ping, பல ஆண்டுகளாக, இது பற்றிய ஆய்வில் ஈடுபடுகின்றார். தற்போது, நீள்ராகக் கலையைக் கற்றுக்கொண்டு, பரவல் செய்து, கையேற்றும் பொருட்டு, உள்மங்கோலிய மேய்ச்சல் பிரதேசங்களின் ஆயர்கள், நீள்ராகச் சங்கங்களையும், நீள்ராக ஆய்வுச் சங்கங்களையும் சுயவிருப்பமாக உருவாக்கியுள்ளனர். அவர் கூறியதாவது: 
"எதிர்காலத்தில், நீள்ராகம் தொடர்ந்து பரவும் என்று நம்புகின்றேன். மேய்ச்சல் பிரதேசங்களில் வாழும் மங்கோலிய இன மக்கள், சிறு வயதில் பேச முடியும் போது, நீள்ராகத்தில் பாட முடியும். நடக்க முடியும் போது, சண்டையிட முடியும் என்று ஒரு நாட்டுப்புற பழமொழி கூறுகின்றது. இதனால், மங்கோலிய நீள்ராகம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து பரவலாகும்" என்றார், அவர்.
நீள்ராகத்தை மேலும் செவ்வனே வளர்த்து, பாதுகாக்கும் பொருட்டு, "நீள்ராக ஊர்" என்ற உள் மங்கோலியாவின் Hulun Beir நகரின் Xin Ba Er Hu Zuo மாவட்டத்தில், "நீள்ராக பாடகர் ஓபெள" அமைக்கப்பட்டுள்ளது. கற்களால் குவிக்கப்படும் ஓபெள, மங்கோலிய இனம் அஞ்சலி செலுத்தும் முக்கிய பொருளாகும். இவை பெரும்பாலும் மலைக் குன்றுகளில் காணப்படுகின்றன. புகழ் பெற்ற நீள்ராகக் கலைஞர் Baoyin Deliger அம்மையாரின் ஆலோசனையின் படி, "பாடகர் ஓபெள" கட்டியமைக்கப்பட்டது. ஓபெளவைக் கட்டியமைப்பதன் மூலம், மேலதிக மக்கள், நீள்ராகத்தில் கவனம் செலுத்தி, இதைப் பாதுகாத்து, தலைமுறைத் தலைமுறையாக பரவல் செய்ய வேண்டும் என்பது அவரின் விருப்பமாகும்.


அஞ்சலி செலுத்தும் விழா நிறைவடைந்த போது, உயர்ந்த மலையில் அமைந்துள்ள "பாடகர் ஓபெளவை" நோக்கி, உள்மங்கோலிய புல்வெளியில் பரவலாக பரவி வரும், "விசாலமான புல்வெளி" என்ற நீள்ராகப் பாடலை அனைவரும் பாடினர். 
நேயர்களே, "பாடகர் ஓபெளவை" பார்த்து, மங்கோலிய இனக் கலைஞர்கள் பாடும் நீள்ராகப் பாடல்களைக் கேட்டு, நீள்ராகம் மீது மங்கோலிய இன மக்களின் அன்புணர்வை, அனைவரும் நேரில் உணர்ந்து கொண்டுள்ளனர். விசாலமான புல்வெளியில், மங்கோலிய இன நீள்ராகம் என்ற தலைசிறந்த தேசிய பண்பாட்டுச் செல்வம், தலைமுறை தலைமுறையாக பரவும் என்பது உறுதி என்று அனைவரும் நம்புகின்றனர்.


1 2