• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-16 11:29:57    
பெய் ஹய் பூங்கா

cri

பெய் ஹய் பூங்கா, பெய்ஜிங் மாநகரின் மையத்தில் அமைந்துள்ளது. இது, சீனாவின் மிகப் பழங்கால, மிக முழுமையான பண்டைய அரசர் கால பூங்காக்களில் ஒன்றாகும். இது ஏறக்குறைய ஆயிரமாண்டு கால வரலாறுடையது.

பெய் ஹய் பூங்காவின் கிழக்குப் பகுதியுடன், அரண்மனை அருங்காட்சியகமும், ஜிங் ஷன் பூங்காவும், தெற்குப் பகுதியுடன், ஜூங் ஹய்யும் நான் ஹய்யும் இணைகின்றன. அதன் மேற்கில், Xing ஷேங் மாளிகையும், லோங் பூ மாளிகையும், வடக்கில் Shi cha ஹய் அமைந்துள்ளன. இது, பெய்ஜிங் மாநகரத்திலுள்ள மிக அழகான காட்சியம்சம் கொண்ட இடமாகும். முந்திய மூன்று கடல்களில் முடலிடம் வகிக்கிறது. பெய் ஹய், தோட்டக் கலைச் சிறப்பு வாய்ந்தது. இது, சீனாவின் பண்டைக் கால பூங்காவின் தலைச்சிறப்பு கொண்ட, மிக மதிப்புக்குரிய மனிதப் பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றாகும்.

பெய் ஹய் பூங்கா, லியௌ வம்சக்காலத்தில் நிறுவப்பட்டது. 1420ம் ஆண்டு, மிங் வம்சக்காலத்தின் தலைநகர், பெய்ஜிங்கிடம் இடம்நகர்ந்தது. வான் ஷோ மலை, தய் யே குளம் ஆகியவை, தடை செய்யப்பட்ட நகரத்தின் மேற்குப் பூங்கா என்று அழைக்கப்பட்டது. மிங் வம்சக்காலத்தில், தெற்கிற்கு, நீர் விரிவாக்கப்பட்டு, மூன்று கடல்கள் என்ற கட்டமைப்பு காணப்பட்டது. சிங் வம்சக்காலத்தில், பேரரசர் ஜியன் லோங், இதனைப் பெருமளவில் சீரமைத்து, தற்போது காணப்படும் தோற்றத்திற்கு அடிப்படையிட்டார்.

1 2