வாணி -- க்ளீடட்ஸ், வழக்கம் போல வகுப்பின் துவக்கத்தில் நேயர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோம்.
க்ளீட்டஸ் -- க்ளீட்டஸ் -- சரி. கடந்த வகுப்பில் நாங்கள் 旅行,lv xing, அதாவது பயணம் பற்றி 4 வாக்கியங்களைக் கற்றுக்கொண்டோம்.
வாணி – ஆமாம். முதலாவது, ni men qu duo chang shi jian . 你们去多长时间? 时间 நேரம். 去,போவது, ni men qu duo chang shi jian . 你们去多长时间?
க்ளீட்டஸ் -- ni men qu duo chang shi jian . 你们去多长时间? நீங்கள் எத்தனை நாட்கள் வெளியில் தங்குகிறீர்கள்
வாணி –அடுத்த வாக்கியம். 半个月左右。Ban ge yue zuo you. Ban அரை, ge விகுதி, yue , மாதம். Zuo you சுமார். 半个月左右。Ban ge yue zuo you.
க்ளீட்டஸ் --半个月左右。Ban ge yue zuo you. சுமார் அரை மாதம்.
வாணி – அடுத்து, 什么时候回来。Shen me shi hou hui lai? Shen me shi hou , எப்போது, நேரம் கேட்கும் போது பயன்படுத்தலாம். Hui lai ,திரும்புவது. 什么时候回来。Shen me shi hou hui lai?
க்ளீட்டஸ் --什么时候回来。Shen me shi hou hui lai? எப்பொழுது திரும்புவீர்கள்?
வாணி – அடுத்து, 这个月底或者下个月初。Zhe ge yue di huo zhe xia ge yue chu . Zhe ge இந்த, xia ge, அடுத்த, di, இறுதி, chu, துவக்கம். 这个月底或者下个月初。Zhe ge yue di huo zhe xia ge yue chu .
க்ளீட்டஸ் --这个月底或者下个月初。Zhe ge yue di huo zhe xia ge yue chu . இந்த திங்களின் இறுதியில் அல்லது அடுத்த திங்களின் துவக்கத்தில்.
வாணி -- கடந்த வாரம் எந்த ஒலிகளைக் கற்றுக்கொண்டோம்?
க்ளீட்டஸ் – கடந்த வாரம் நாங்கள் m என்ற முதல் ஒலியைக் கற்றுக்கொண்டுள்ளோம். மேலும் இதனுடன் ஒரு சொல் mama, முதல் தொனி 妈妈。அம்மா
வாணி – நல்லது. என்னுடன் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும். mama, முதல் தொனி 妈妈。
க்ளீட்டஸ் -- mama, முதல் தொனி 妈妈。அம்மா
வாணி –அடுத்து, f
க்ளீட்டஸ் – f
வாணி – t-ou, f-a. tou 2வது தொனி, தலை. f-a, 4வது தொனி, முடி. t-ou, f-a 头发。
க்ளீட்டஸ் -- tou 2வது தொனி, தலை. f-a, 4வது தொனி, முடி. t-ou, f-a 头发。
வாணி – க்ளீட்டஸ் புதிய வகுப்பை துவங்கலாமா?
க்ளீட்டஸ் – துவங்கலாமே.
வாணி – இன்று வானிலை பற்றிய உரையாடலைக் கற்றுக்கொள்ளலாம். வாக்கியத்தைக் கற்றுக்கொள்வதற்கு முன், என்னுடன் சில சொற்களைக் கற்றுக்கொள்ளுங்கள். முதலில், tian qi, 天气,வானிலை
க்ளீட்டஸ் -- tian qi, 天气,வானிலை
வாணி – மீண்டும் ஒரு முறை, tian qi, 天气
க்ளீட்டஸ் -- tian qi, 天气,வானிலை
வாணி – அடுத்து, 冷 leng, குளிர்
க்ளீட்டஸ் --冷 leng, குளிர்
வாணி – மீண்டும் ஒரு முறை, 冷 leng, குளிர்
க்ளீட்டஸ் --冷 leng, குளிர்
வாணி – அடுத்து, 热,re, வெப்பம்
க்ளீட்டஸ் --热,re, வெப்பம்
வாணி – மீண்டும் ஒரு முறை, 热,re
க்ளீட்டஸ் --热,re, வெப்பம்
1 2
|