• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-17 10:32:52    
நிழற்படச் செய்திமுகவர் ஹுவாங் சேங் தே

cri

காணாமல் போன கிராமம்

"சுற்றுச்சூழல் என்ன என்று சிலருக்கு தெரியாது. அந்த இடத்தில் தூய்மைக்கேடு கடுமையாக உள்ளது என்று நீங்கள் சொன்னாலும், உள்ளூர் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பொருளாதார வளர்ச்சிக்காக தாம் பாடுபட்டு, அவ்வளவு அதிகமான கண்டனங்களுக்குள்ளானது ஏன் என்று அவர் கருதினார். பொது மக்களும் இது பற்றி புரிந்து கொள்ளவில்லை. உண்ண உணவின்றித் தவித்ததால் தான், காடுகளை அடித்து, தரிசு நிலங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. வாழ்க்கை பிழைப்பைத் துண்டிப்பது ஏன் என்று அவர்கள் கருதுகின்றனர். பல தரப்புகளிலிருந்து வந்த தடைகள், ஒன்றுக்கு ஒன்று நீக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.

பின்னர், கள ஆய்வு மற்றும் பேட்டிக்காக, ஹுவாங் சேங் தே 5 முறையும் தனியாக மேற்கு பகுதிக்குச் சென்றார். இன்று வரை, மேற்கு பகுதியிலுள்ள சான் சி மாநிலம், கான் சு மாநிலம், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், மாநகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களுக்கு அவர் சென்றுள்ளார். அவரது பயணத்தின் மொத்த நீளம் 2 லட்சம் கிலோமீட்டருக்கு மேலாகும்.

மேற்கு பகுதியில் கள ஆய்வு செய்து பேட்டி காணும் ஒவ்வொரு முறையும், தாம் கண்டதையும் கேள்விபட்டதையும் பதிவு செய்து குய் யாங் நாளேட்டுக்கு அனுப்பியது மட்டுமல்ல, பல்வேறு இடங்களின் செய்தியேடுகளிலும் ஹுவாங் சேங் தே கட்டுரைகளை வெளியிட்டு, மேற்கு பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே, நாடு முழுவதன் 30க்கும் அதிகமான செய்தியேடுகள் மற்றும் இதழ்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட எழுத்துக்கள் கொண்ட கட்டுரைகளையும் 300க்கும் அதிகமான படங்களையும் வெளியிட்டுள்ளார். பிறகு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சிறப்பு திரைப்படம் எடுக்கவும், வானொலி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குவதற்கும் வானொலி நிலையங்கள் மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் சில அவருக்கு அழைப்பு விடுத்தன. பல வேலைகளில் ஈடுபட்ட அவர், கொண்டு செல்லும் சாதனங்கள் சிக்கலாகி வருகின்றன. நிழற்படக் கருவியைத் தவிர, video படக் கருவி, கணினி முதலியவற்றையும் அவர் கொண்டு செல்ல வேண்டும். எனவே, இறுதியில் jeep ஒன்றை அவர் வாங்கி, அனைத்து சாதனங்களையும் ஏற்றிச்செல்கிறார்.

வெட்டி எடுக்கப்பட்ட காடு

ஹுவாங் சேங் தே வெளியிட்ட கட்டுரைகள் மற்றும் படங்களின் மூலம், சீனாவின் மேற்கு பகுதியின் உயிரின வாழ்க்கையையும் சுற்றுச்சூழல் நிலைமையையும் மேலும் அதிகமான மக்கள் அறிந்து கொள்கின்றனர். இது சமூகத்தில் பெரும் மறுமொழியை ஏற்படுத்தியது. அரசு வாரியங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2000ஆம் ஆண்டில் தொடர்புடைய வாரியங்கள் நடத்திய மேற்கு பகுதிக் கருத்தரங்கில், மேற்கு பகுதியில் ஹுவாங் சேங் தே பிடித்த நிழற்படங்கள், இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு அதிர்ச்சி தந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், சீன அரசவை நடத்திய மேற்கு பகுதியின் இணைய தளம் பற்றிய உயர் நிலைக் கருத்தரங்கில் தலைமை உரை நிகழ்த்த, ஏற்பாட்டுக் குழு அவருக்கு அழைப்பு விடுத்தது. மேற்கு பகுதியின் நிகழ்வு நிலை மற்றும் நீண்டகால கள ஆய்வில் பெற்ற உதாரணங்களின் அடிப்படையில், மேற்கு பகுதியின் தகவல் மயாக்கக் கட்டுமானத்தை வலுப்படுத்தும் அவசியத்தையும் அவசரத்தையும் அவர் முன்வைத்தார்.

ஹுவாங் சேங் தேவின் முயற்சிகள் வீணாகவில்லை. பல்வேறு இடங்களைச் சேர்ந்த பொது மக்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்து வலுப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரித்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பை விட, மேற்கு பகுதியின் சுற்றுச்சூழல் பெரிதும் மேம்பட்டுள்ளது.

குய் யாங் நாளேடு நிறுவனத்தின் தலைமை பதிப்பாசிரியர் சுன் பேங் ச்சி, ஹுவாங் சேங் தேவை வெகுவாக பாராட்டினார்.

"அவர் வெளியிட்ட கட்டுரைகளும் படங்களும், மேற்கு பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பதிவு செய்யும் அரிய தரவுகளாக மாறியுள்ளன. அவரின் செயல், செய்தியாளர் ஒருவரின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது" என்றார் அவர்.


1 2