• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-24 21:24:19    
தேவலோகத்தைக் காப்பாற்றும் நடவடிக்கை

cri

ஹுலுன்பேர் புல்வெளி

சீனாவின் வட பகுதியில் அமைந்துள்ள உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, எமது செய்தியாளர்கள் இப்பிரதேசத்தின் வட கிழக்கு பகுதியிலுள்ள ஹுலுன்பேர் புல்வெளி சென்றடைந்தனர். தரமான நில வளமும் அதிகமான மழையும் கொண்ட இந்தப் புல்வெளி, இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்ற பாடலின் அம்சங்களைப் போல் காணப்படுகிறது. நீலமான வானம், தூய்மையான ஏரி. பச்சைப் பசேல் என்ற புல்வெளி என்று இப்பாடல் பாடுகிறது. செய்தியாளரின் பார்வையிலான தேவலோகம், ஹுலுன்போர் புல்வெளி தான்.

உள்ளூர் மக்களின் கருத்தில், ஹுலுன்பேர் புல்வெளி, உள்மங்கோலியாவில் மிகச் சிறந்ததாக உள்ளது. இந்தக் கருத்து விவாதத்துக்குரிய கருத்தாக இருக்கக் கூடும். ஆனால், இங்கே, உலகில் மிகப் பெரிய பரப்பளவுடைய இயற்கை மேய்ச்சல் நிலம் இருப்பது உண்மையே. சீனாவில் மிகப் பெரிய மாசற்ற விலங்கு உணவுப் பொருட்களின் தளமாகவும் இது அமைந்துள்ளது.

ஹுலுன்பேர் நகரிலுள்ள ஹெலால் பிரதேசத்தின் வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு பணியகத்தின் தலைவர் பாகென் கூறியதாவது—

"தற்போது ஹுலுன்பேர் புல்வெளியின் முழுச் சூழல் சீரழிந்துள்ளது. இது உண்மை தான். இதை யாரும் மறுக்கவும் தவிர்க்கவும் தேவையில்லை" என்றார் அவர்.
ஆயர் குடும்பத்தில் பிறந்த பாகென், கடந்த 22 ஆண்டுகளாக, வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையிலான பணியில் ஈடுபட்டு வருகிறார். பல ஆண்டுகால வறட்சி மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், ஹுலுன்பேர் புல்வெளியின் புல் வளர்ச்சி அளவு முன்பை விட பெருமளவில் குறைந்துள்ளது.
ஹுலுன்பேர் நகரிலுள்ள தேசிய அளவிலான தாலாய் ஏரி இயற்கை பாதுகாப்பு மண்டல நிர்வாகத் துறையின் துணைத் தலைவர் லியூ சுங் தௌ, பாகென்னின் மேற்கூறிய கூற்றை உறுதிப்படுத்தினார்.

ஆயர் ஹௌபிஸ்கலாது செய்தியாளரிடம் பேசுகையில், இங்குள்ள மேய்ச்சல் நிலம் பார்ப்பதற்கு பச்சைப் பசேல் என இருந்தாலும், மேய்ச்சல் புற்களின் வகைகள் குறைந்துள்ளன என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது—

"உடன்படிக்கை மூலம் பொறுப்பேற்கும் மேய்ச்சல் நிலத்தில், அடுத்தடுத்து பல ஆண்டுகளாக வறட்சி நிலவுவதால், ஆடு மாடுகள் நீண்டகாலமாக உலர்ந்த புற்களையே தின்னுகின்றன. எனவே, மேய்ச்சல் நிலத்தைப் பாதுகாத்து, பாலைவன மயமாக்கத்தைக் கட்டுப்படுத்தி, புற்களை நடுவது என்பது, தற்போது புல்வெளியில் முக்கிய பணியாகும்" என்றார் அவர்.

ஹௌபிஸ்கலாது கூறியதைப் போல், மேய்ச்சல் நிலத்தைப் பாதுகாத்து உயிரின வாழ்க்கைச் சூழலை மீட்பதை முதன்மையாகக் கருத்தில் கொண்டு ஹுலுன்பேர் உள்ளூர் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கடந்த சில ஆண்டுகளில், மேய்ச்சல் நிலத்தை புல்வெளியாக மாற்றுவது உள்ளிட்ட மேய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளைத் தவிர, தொழுவங்களிலுள்ள கால்நடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் மேய்ச்சல் நிலத்தைப் பாதுகாக்கிறது. ஹெலால் பிரதேச வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு பணியகத்தின் தலைவர் பாகென் கூறியதாவது—

"ஹுலுன்பேர் புல்வெளியில் சுமார் 70 லட்சம் கால்நடைகள் இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் கால்நடைகளைக் குறைக்க தற்போது ஹுலுன்பேர் நகரம் உறுதி பூண்டுள்ளது. இவ்வாண்டு கால்நடைகளின் எண்ணிக்கை 50 லட்சமாக குறைந்துள்ளது" என்றார் அவர்.

1 2