• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-24 21:24:19    
தேவலோகத்தைக் காப்பாற்றும் நடவடிக்கை

cri

ஒரு ஹெக்டர் தரமிக்க மேய்ச்சல் நிலம், ஓராண்டில் ஒரு ஆட்டுக்கு தேவையான தீனியை மட்டும் வழங்க முடியும். 10 லட்சம் கால்நடைகளைக் குறைப்பது என்பது, 100 லட்சம் ஹெக்டர் மேய்ச்சல் நிலத்தைப் பாதுகாப்பதற்குச் சமம். ஆனால், மேய்ச்சல் நிலம், ஆயர்கள் வாழ்க்கை பிழைப்புக்கான அடிப்படையாகும். மேய்ச்சல் தடுப்பு மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கையை குறைப்பதன் விளைவாக, ஆயர்களின் வருமானம் குறையும். இதைக் கருத்தில் கொண்ட உள்ளூர் அரசு வேறு வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது.

2001ஆம் ஆண்டு தொடங்கி, ஏவென்க் தன்னாட்சி மாவட்ட அரசு உலர் நிலத்தைப் பண்படுத்தி, 80 கிலோமீட்டர் வரம்புக்குள் அதிக பால் தரும் பசு மாடு வளர்ப்புக்கான 35 முன்மாதிரி மண்டலங்களைக் கட்டியமைத்தது. ஆயர்கள் முறையாக உடன்படிக்கைக்கிணங்க குடும்ப கால்நடை பண்ணையில் இத்தகைய பசு மாடுகளை வளர்க்கின்றனர். சுமார் 33.3 ஹெக்டர் நிலப்பரப்பிலான கால்நடை பண்ணையில் பத்தில் ஒரு பகுதி பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. நீண்டகாலத்திற்கு சேமிக்கப்படக் கூடிய தீனியாக மக்காச்சோளம் தயாரிக்கப்படலாம். இத்தகைய தொடரவல்ல குடும்ப கால்நடை பண்ணை, கால்நடைகளின் சீரான வளர்ச்சிக்கு உறுதியளிப்பதோடு, புல்வெளியின் உயிரின வாழ்க்கைச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

மேய்ச்சல் நிலத்தைப் பாதுகாப்பதற்காக, ஆட்டுக் குட்டியை ஓராண்டுக்குள் மொழு மொழு என்று வளர்த்து, குறிப்பிட்ட காலத்திற்கு முன் பட்டியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை உள்ளூர் அரசு மேற்கொண்டுள்ளது என்று சென்பார்ஹு மாவட்டத்தின் ஹுஹேநோல் வட்டத்தைச் சேர்ந்த ஆயர் பயால்து செய்தியாளரிடம் கூறினார். இந்நடவடிக்கை மூலம், சந்தையில் விற்கப்பட்ட ஆட்டிறைச்சி மேலும் சுவையாகவும் அதன் விலை அதிகமாகவும் உள்ளது. மேலும் அதிகமான தீனிச் செலவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய புதிய நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும் முன், ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் மேய்ச்சல் நிலம் பாலைவனமாகிய பரப்பளவு 10 விழுக்காடு முதல் 20 விழுக்காட்டு வேகத்தில் அதிகரித்து வந்தது. சில ஆண்டுகால முயற்சியில் மட்டுமே, அங்கே புதிய பாலைவன மயமாக்க நிலம் ஏதும் ஏற்படவில்லை. பாலைவனமாகிய நிலப்பரப்பு கட்டுப்பாட்டுக்கு வந்த பின் தற்போது குறைந்து வருகிறது.
பாகென் கூறியதாவது—

"இந்தப் பகுதி நடுதலுக்கு ஏற்றதல்ல என்றால், நடக் கூடாது. வளர்ப்புக்கு ஏற்றதல்ல என்றால் வளர்க்கக் கூடாது. புல்வெளி, ஆடு மாடுகளை மேய்க்கும் நிலமாக இருக்க வேண்டும் என பலர் கருதுகின்றனர். இந்த எண்ணம் தவறானது. உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு, புல்வெளியின் முதல் பயன். காட்சித் தலமாக இருப்பது அதன் இரண்டாவது பயன். உற்பத்தி சாதனமாக இருப்பது, அதன் மூன்றாவது பயன் தான். பொதுவாகக் கூறினால், புல்வெளி மூலவளமாக விளங்குகிறது" என்றார் அவர்.

உள்ளூர் வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புப் பணியகத்தின் தலைவர் பாகென்னின் உரை, அடிப்படையில் உயிரின வாழ்க்கைச் சூழலை உள்ளூர் அரசு கட்டுப்படுத்தும் மன உறுதியை வெளிப்படுத்துகிறது.

அத்துடன், வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புப் பிரதேசத்தின் நகரமயமாக்கத்தை நனவாக்கி, ஆயர்களை கால்நடை வளர்ப்புப் பகுதிகளிலிருந்து வெளியேற்றுவது என்பது, புல்வெளியைக் காப்பாற்றும் அடிப்படையாகும் என்றும் உள்ளூர் அரசு உணர்ந்துள்ளது.


1 2