• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-25 09:24:17    
உல‌க‌மே உன்னிப்பாக சீனாவைக் கண்மூடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது

cri

உல‌க‌மே உன்னிப்பாக சீனாவைக் கண்மூடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது.

என்ன காரணம்?

சீனாவில் ந‌டைபெறும் 17வது தேசிய மாநாடுதான் கார‌ண‌ம்!

சீனாவின் எதிர்கால வளர்ச்சியுடன் தொடர்புடையது,17வது தேசிய மாநாடு.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாடு சீன அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய செல்வாக்கு ஏற்படுத்தும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி உண்மை. இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். சீனா பல துறைகளில் வெற்றிகளைக் குவித்துள்ள நிலையில் இந்த 17வது தேசிய மாநாடு துவங்கி நடைபெறுகிறது. அதனால்தான் இந்த‌ அள‌வுக்கு முக்கிய‌த்துவ‌த்தை ஏற்ப‌டுத்தி உல‌க‌த்தின் க‌வ‌ன‌த்தை ஈர்த்திருக்கிற‌து. எதிர்கால‌த் திட்ட‌ங்க‌ள் என்ன‌ என்று அறிந்துகொள்வ‌திலும், பொருளாதாரத் திட்டமிடுதல், வெளிநாட்டு உறவுமுறை போன்றவற்றில் அதன் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்வதிலும் உலகம் காட்டும் ஆவலே காரணம்!

ஒருநாட்டின் முன்னேற்ற‌த்தின் எதிர்காலம் அந்த‌ நாட்டின் தொலைநோக்குத் திட்ட‌மிட‌ல், சீரான‌ க‌ண்காணிப்பு, திற‌மையான‌ வ‌ழிந‌ட‌த்துத‌ல் நடைமுறையாக்கம் போன்ற‌வ‌ற்றில்தான் அட‌ங்கியுள்ள‌து.

அடுத்த 5 ஆண்டுகால சீன வளர்ச்சிக்கு இம்மாநாடு வழிக்காட்டல் கொள்கையை உருவாக்கும்

என்ற நிலையில் சீனாவின் சீர்த்திருத்தமும், வளர்ச்சி முன்னேற்ற போக்கும் இந்த எழுச்சிமிகு மாநாட்டினால் தான் நிர்ணயிக்கப்படும் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

அதிக மக்கள் தொகை கொண்ட சீரிய‌ சிறந்த வரலாறுடைய பழம்பெரும் நாடு சீனாவாகும்!

உலகத்தின் இன்றைய‌ நிலைக்கு ஏற்ப, நாட்டின் வளர்ச்சி பாதையை சரியான திசையில் நடத்திவருவதே சீன கம்யூனிஸ்ட்கட்சியின் மிகப் பெரிய‌ வெற்றிகளில் ஒன்றாகும் என்று கருதுகிறேன்.

1 2