• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-25 09:24:17    
உல‌க‌மே உன்னிப்பாக சீனாவைக் கண்மூடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது

cri

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் பெற்றுள்ள சாதனை சாதாரணமானதல்ல;

வரலாற்றில் கண்டிராத வேகமான வளர்ச்சியும் நவீன மயமாக்கலை நடைமுறையாக்கமும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெறுகின்றது. இக் கட்சி நன்றாக ஆட்சி செய்து, சிறப்பு வெற்றி பெற்றுள்ளது .

இதைத்தான் "கடந்த 5 ஆண்டுகாலம், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணியிலும், ஓரளவு வசதியான சமூகத்தை பன்முகங்களிலும் உருவாக்குவதிலும் மாபெரும் முன்னேற்றம் காணப்பட்ட 5 ஆண்டுகாலமாகும். சீனப் பொருளாதார ஆற்றல் பெருமளவில் உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கை தெள்ளத்தெளிவாக மேம்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. சமூகக் காப்பீட்டு முறைமையின் உருவாக்கம் மேலும் வலுப்பட்டுள்ளது. பொதுச் சுகாதார முறைமையும், அடிப்படை மருத்துவ சேவையும் மேம்பட்டுள்ளன. கிராமங்களில் இலவச கட்டாயக் கல்வி பன்முகங்களிலும் நனவாகியுள்ளது"என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹூச்சிந்தாவ் மாநாட்டில் பெருமை பொங்க குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக, சீனப் பொருளாதார வளர்ச்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்று சீனாவின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்துவரும் உலக நாடுகள் கருதுவதை பல்வேறு தகவல்கள் சுட்டுகின்றன.

நாட்டின் ஒருமைப்பாட்டு ஆற்றலை நிலைநிறுத்துவது என்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கட்சியாக பெற்றுள்ள முக்கிய சாதனையாகும் என்று நான் கருதுகிறேன். நாட்டின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சிப் போக்கில் சீனக் கம்யூனில்ட் கட்சி எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் அறைகூவல்களையும் ச‌மாளித்து முன்னேற்ற‌ப்பாதையில் ந‌டைபோட‌ எடுத்துவைக்கும் காலடி அடுத்த ‌க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கைதான் இந்த‌ மாநாடு!

2200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட 17வது தேசிய மாநாட்டில்,"12 பகுதிகள் அடங்கிய‌ அறிக்கையில் 2020ஆம் ஆண்டுக்குள் சீன வளர்ச்சியின் புதிய இலக்குகளை தலைவர் ஹுசிந்தாவ் முன்வைத்தார். நபர்வாரி உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 2000ஆம் ஆண்டில் இருந்ததை விட 3 மடங்கு அதிகரிக்க வேண்டும். நகர-கிராம மக்களுக்கு வழங்கப்படும் சமூகக் காப்பீட்டு முறைமை அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். வறுமை அடிப்படையில் ஒழிக்கப்பட வேண்டும். அடிப்படை மருத்துவ சேவையை அனைவரும் அனுபவிக்க வேண்டும். எரியாற்றல் மற்றும் மூலவளத்தின் சிக்கனப் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு, அதிகரிப்பு முறை, நுகர்வு மாதிரி அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் என்று அவ‌ர் தெரிவித்திருப்ப‌து

சீன‌ அர‌சின் தெளிவான‌ அடுத்த‌ ந‌க‌ர்வைத் தெரிவிக்கிற‌து!

சீனாவின் நகரங்களுக்கும் கிராமங்களுக்கிடையிலும், பல்வேறு வட்டாரங்களுக்கிடையிலும் நிலவும் மக்களுக்கு வழங்கப்படும் பொதுச் சேவையின்யின் சமனற்ற நிலைமையில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெள்ள‌த் தெளிவாக‌ச் சொல்லியிருப்ப‌து இலிருந்தே கிராம‌ங்க‌ளின் பால் கொண்டுள்ள‌ அக்க‌றையை வெளிச்ச‌மிட்டுக் காட்டுகிற‌து!

"மக்கள் ஜனநாயகம், சோஷலிசத்தின் உயிராகும். பல்வேறு நிலையிலும், துறைகளிலும், அரசியல் விவகாரத்தில் பொது மக்களின் ஒழுங்கான பங்கெடுப்பை விரிவாக்க வேண்டும். சோஷலிச ஜனநாயகம் மற்றும் சட்டச் செயல்பாடு, சுதந்திரம் மற்றும் சமம், நியாயம் மற்றும் நேர்மை என்ற கருத்தை நிலைநாட்ட வேண்டும்" என்ற அவரின் அறிக்கை அப்ப‌ழுக்க‌ற்ற‌ ஜ‌ன‌நாய‌க‌த்தை உயிர்நாடியாக‌ கொண்டுள்ள‌தை அறிய‌ முடிகிற‌து!

திறப்பு நெடுநோக்கு திட்டத்தை உறுதியாக கடைப்பிடித்து, தனது நாட்டின் வளர்ச்சியை நனவாக்குவதோடு, இதர நாடுகள், குறிப்பாக வளரும் நாடுகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும்" என்ற‌ அவ‌ர‌து முழ‌க்க‌ம் அங்கு கூடியிருந்த‌ அத்த‌னை உள்ள‌ங்க‌ளின் க‌ண்ணாடியாக‌ப் பிர‌திப‌லித்த‌து என‌லாம்!

இம்மாநாட்டின் மூலம், எதிர்காலத்தில் சீனாவின் வளர்ச்சித் திசையை மக்கள் எளிதாக அறிந்து கொள்ள முன் கூட்டியே ஓர் வாய்ப்பு கிடைத்துள்ளது. சீனச் சமூகத்தில் நிலவுகின்ற அடிப்படை பிரச்சினைகளான, ஏழை பணக்கார இடைவெளி, சுற்றுச் சூழல் மாசுபாடு, சமூகத்தில் முதியோர் மயமாக்கம், பன்முக சமூகக் காப்பீட்டு அமைப்பு முறை உருவாக்குவது, உயிரின வாழ்க்கை பிரச்சினை முதலிய பிரச்சினைளை தவிர்க்க சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹுசிந்தாவ் தீர்வுக்கான வழிமுறைகளை மாநாட்டின் துவக்கத்திலேயே முன்வைத்துள்ளதால் இந்த மாநாட்டின் நோக்கம் பெருத்த வெற்றியடையும் என்பதில் எனக்கு எள் முனையளவும் அஐமில்லை!


1 2