
மஞ்சள் இன மக்களுக்கான முதலாவது மரபணு வரைபடம், அக்டோபர் 11ஆம் நாளன்று தென் சீனாவின் சென் ஜென் நகரில் வெளியிடப்பட்டுள்ளது. இது, சீன இனத்தவருக்குரிய வரையறை மரபணுக் கூறுகள் பற்றிய முதல் வரைபடம் மட்டுமல்ல,உலகளவில் 200 கோடி மஞ்சள் இன மக்களுக்குரிய தனிநபர் மரபணுக் கூறகள் பற்றிய முதல் வரைபடமுமாகும்.
அறிவியல் துறையில் மைல் கல்லாக விளங்கும் இவ்வாய்வுக் கனியானது, சீனர் ஏன் ஆசிய மக்களின் DNA ,மறைந்து கிடக்கும் நோய்களுக்கான மரபணுகள்,கொள்ளை நோய்கள் குறித்த முன் மதிப்பீடு உள்ளிட்ட துறைகளின் ஆய்வுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த மரபணு வரைபடத்துடன் தொடர்புடைய தரவுகளை நூலாகத் தொகுத்தால் அதற்கு 100 மீட்டர் உயரம் இருக்கும். இத்தரவுகள், வினாடிக்கு ஒரு லட்சம் கோடி முறை கணக்கிடக் கூடிய 2 கணினிகள், அரை ஆண்டுகாலத்தில் இரவு பகலாக வேலை செய்து பெற்ற முடிவுகளாகும் என்று ஆய்வுப் பணியில் ஈடுபட்ட முனைவர் வாங் ஜுங் தெரிவித்துள்ளார்.
மஞ்சள் இன மக்களுக்குரிய மரபணுக் கூறுகள் பற்றிய வரைபடம் வெற்றிகரமாக தீட்டப்பட்டமை, மஞ்சள் இன மக்களுக்குரிய தனிச்சிறப்பு வாய்ந்த உயிர் ரகசியத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்பதைக் குறிக்கிறது. அன்றியும், இது, மஞ்சள் இன மக்களைப் பீடிக்கும் முக்கிய நோய்களுக்கான மரபீனிகளைக் கண்டுபிடிக்கவும் ஆய்வாளர்களுக்குத் துணை புரியும் என்றும் வாங் ஜுங் கூறினார்.
கறிகளைச் சமைக்கக்கூடிய
இயந்திர மனிதன்
சீனாவின் குவோங்துங் மாநிலத்து சென் ஜென் நகரில், இயந்திர மனிதனால் சனமக்கப்படும் கறிகளை, மக்கள் விரைவில் உண்ண உள்ளனர்.
சென்ஜென் நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச உயரிய புதிய தொழில்நுட்பச் சாதனைகள் பற்றிய பொருட் காட்சியில் இத்தகைய இயந்திர மனிதன், பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஃபான் சிங் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய இந்தக் கறி தயாரிப்பு இயந்திர மனிதன், ஓராண்டுகால இயங்கிய பின், தற்போது புறத்தோற்றத்திலும் அது சமைத்த கறிகளின் கவையிலும் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இத்தகைய இயந்திர மனிதன், 180 சீனபபாணி கறிகளைத் தாளித்துச் சமைக்க முடியும். இக்கறிகள் அனைத்தும், புகழ்பெற்ற சமையல் வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டவை.
நடப்புப் பொருட்காட்சியில், இவ்வியந்திர மனிதன் தயாரித்த கறிகளைப் பார்வையாளர்கள் சுவைத்துப் பார்த்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
1 2
|