சோதனைப் பணி முடிந்த பின், அடுத்த ஆண்டு மார்ச் திங்களில் இத்தகைய இயந்திர மனிதன் சந்தைப்படுத்தப்படும். 2010ஆண்டு, கறிகளைச் சமைக்கக்கூடிய சிறிய ரக இயந்திர மனிதன், நகரவாசிக் குடும்பங்களில் நுழையும். அதன் விலை,சுமார் 50 ஆயிரம் யுவான் என்று இந்நிறுவனத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குவைத் நாட்டில் மகளிர் காவற்துறையினர்
குவைத் நாட்டில் காவற்துறை பணியில் பெண்களை அமர்த்த, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பெண்களைக் காவல் பணியில் அமர்த்துவது, வளர்ந்த தாடுகளில் சர்வசாதாரணமாக நடந்து நருகிறது. சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இஸ்லாமிய நாடுகளிலோ பெண்களைக் காவல் பணியில் அமர்த்துவது, மிக அரிதாகவே உள்ளது. காவல் பணியில் பெண்களை அமர்த்துவது என்ற எண்ணம், இப்போது தான் ஏற்பட்டுள்ளது. குவைத் நாட்டில் மகளிர் காவற்துறையினர் அடுத்த ஆண்டு பணியில் அமர்த்தப்படுவர். இதற்கான நடைமுறைகள் துவங்கி விட்டன. இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண்களே, இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் சேர்வதற்கான வயது வரம்பு 30 முதல் 60 வயது வரை நிர்ணயிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
பள்ளிக்கூடங்களுக்கு செல்லிடபேசியைக்
கொண்டுவர தடை
இந்திய செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ-மாணவிகள் செல்லிடபேசியைக் கொண்டு செல்லவும், பேசவும், அரசு தடை விதித்துள்ளது.
இத்தடை உத்தரவு, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அக்டோபர் 16 ஆம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், பள்ளி நேரங்களில் செல்லிடபேசியை பயன்படுத்துவதால் அவர்களது கவனம், முழுக்க கல்வி கற்பதில் இருந்து திசை திரும்புகிறது. இதன் காரணமாக ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் திறனும், வீணடிக்கப்படுகின்றது என்பதைப் பல கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கவனித்துள்ளனர். மேலும் பாடங்களில் கவனத்தை முழுமையாக செலுத்தாமல் செல்லிடபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்புவதில் கவனம் செலுத்தும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை அரசு கருத்தில் கொண்டு வந்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ மாணவிகள் வயது வரம்பின்றி செல்லிடபேசியைக் கொண்டுவருவதைத் தடுப்பது குறித்து அரசு பரிசீலித்துள்ளது என்று தெரிய வருகிறது. 1 2
|