சி லின் கோ லெ நிர்வாகப் பிரத்தேசம், சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. 2 லட்சத்து 3 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய இந்நிர்வாகப் பிரதேசத்தின் மக்கள் தொகை 10 லட்சம் மட்டுமே.
சி லின் கோ லெ நிர்வாகப் பிரத்தேச மண்ணில் நடை போடும் போது, இப்பரந்த புல்வெளியும் இங்குள்ள மக்களும், வேகமாக முன்னேறி வருகின்றனர் என்பதை அறிய முடியும். தொழில் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளித்து, மக்களும் இயற்கையும் இணக்கமாக வளர்வது என்ற பாதையில் இங்கு வாழ்கின்ற மக்கள் அசுர வேகத்தில் முன்னேறி வருகின்றனர்.
சி லின் கோ லெ இன் மைய நகரமான---ஹிலின்கோட், பெய்ஜிங்கிலிருந்து 500 கிலோமீட்டருக்குக் குறைவான இடத்தில் உள்ளது. விமானத்தின் மூலம் அங்கு சென்று அடைய சுமார் ஒரு மணி நேரம் போதும். சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர் டார்மா 6 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அங்கு சென்றார். அங்குள்ள மாற்றங்களைக் கண்டு அவர் பெரிதும் உணர்ச்சி வசப்பட்டார். அவர் கூறியதாவது, இங்கு மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உயரமான மாளிகைகள் நிமிர்ந்து நிற்கின்றன. சாலைகள் அகலமானவை. இதுவும் என் நினைவில் இருந்த பழைய xi lin நகரும் முற்றிலும் வேறுபட்ட இரு நகரங்களைப் போல் காட்சியளிக்கின்றன. இது, ஒரு விரைவாக வளரும் உயிராற்றல் மிகுந்த நகரமாகும்.
கடந்த சில ஆண்டுகளில் இந்நிர்வாகப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் கண்ட சாதனைகள் பற்றி, xi lin guo le யின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் huo jinbing, எமது செய்தியாளரிடம் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது,
கடந்த 5 ஆண்டுகளில் இந்நிர்வாகப் பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, 2002ம் ஆண்டின் 800 கோடி யுவானிலிருந்து 2005ம் ஆண்டின் 1692கோடியே 20 லட்சமாக அதிகரித்துள்ளது. 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை, 2710 கோடி யுவானை எட்டும். 2002ம் ஆண்டில் இருப்பதை விட இது 2.4 மடங்கு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. நகரவாசிகளின் நபர்வரி ஆண்டு வருமானம், 10 ஆயிரம் யுவானையும், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி வருமானம் 3 ஆயிரத்து 820 யுவானையும் எட்டும். அதாவது 5 ஆண்டுகளில் வருமானத்தை 2 மடங்காக்குவது என்ற இலக்கு நனவாக்கப்படும்.
முன்பு, கால்நடை வளர்ப்புத் தொழிலை முக்கியமாகக் கொண்ட xi lin guo le, ஏன் தொழிற்துறையை முழு மூச்சுடன் வளர்க்கிறது?
xi lin guo le தலைவர்கள், தொழிற்துறையை முழு மூச்சுடன் வளர்ப்பது மற்றும் மேய்ச்சல் நிலத்தைப் பாதுகாப்பது பற்றி ஆராய்ந்தனர். ஓர் ஆயரைக் குடிபெயர்ப்பது, சுமார் ஒரு சதுர கிலோமீட்டர் மேய்ச்சல் நிலத்தின் உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்புப் பிரச்சினைக்குத் தீர்ப்பதற்குச் சமம். 5 கிலோமீட்டர் நிலப்பரப்புடைய மாசுப்பாடில்லாத திறந்த சுரங்கத்தைக் கட்டியமைத்தால், ஆண்டுதோறும் தொழிற்துறை மதிப்பு, 200கோடி யுவானை அதிகரிக்கலாம். திட்டப்பணிகள் உற்பத்தியில் இறங்கிய பின், ஆயிரக்கணக்கான ஆயர்கள் வேலை பெறுவர். இது, 1000 சதுர கிலோமீட்டர் மேய்ச்சல் நிலம் நீண்டகால, பயனுள்ள பாதுகாப்பு பெறுவதற்கு நிகரானது.
1 2
|