• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-29 13:31:14    
சீனாவின் சி லின் கோ லெ நிர்வாகப் பிரத்தேசம்

cri

தொழிற்துறை வளர்ச்சியைப், பொருளாதாரக் கட்டுமானத்தின் முதன்மைப் பணியாகக் கருத வேண்டும். இவ்வாறு செய்வதால், கால்நடை வளர்ப்புப் பிரதேச மக்கள், நகரங்களுகுக் குடிபெயர்வதை விரைவுபடுத்துவோம். இதன் விளைவாக, கால்நடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, மேய்ச்சல் நிலத்தைப் பாதுகாத்து, இணக்கமாக வளர்வது என்ற இலக்கை நனவாக்குவோம்.

2003ம் ஆண்டு ஜீலை திங்களில், இந்நிர்வாகப் பிரதேசத்தின் பொருளாதாரப் பணிக் கூட்டம் இதை தீர்மானித்தது. தற்போதைய நிலைமையை ஆராய்வதன் மூலம், எரியாற்றல், வேதித்தொழில், உலோக சுரங்க அகழ்வு, கால்நடை மற்றும் வேளாண் உற்பத்திப் பொருட்களின் பதனீடு, கட்டடப் பொருள் ஆகியவற்றை, உள்ளூர் தனிச்சிறப்பு வாய்ந்த 5 தொழில்களாக நிர்ணயித்து, முதலீட்டை ஈர்க்கும் பணியைச் சுறுசுறுப்பாக மேற்கொள்ள xi lin guo le தலைவர்கள் முடிவெடுத்தனர்.

அங்குள்ள, புகழ் பெற்ற yuan he குழுமத்தின் தலைமை மேலாளர் zhang fenghai கூறியதாவது,

சி லின் கோ லெ நிர்வாகப் பிரதேசம் மற்றும் xi lin hao te நகரிலான முதலீட்டு சூழ்நிலை, மிக நல்லது. இங்கு முதலீடு செய்தால், பல்வேறு நிலை தலைவர்கள் ஆதரவளிக்கின்றனர். முன்னுரிமையுடன் கூடிய பல்வகை கொள்கைகளும் இங்குள்ளன.

2006ம் ஆண்டின் இறுதி வரை, சி லின் கோ லெஇல் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு தொழிற் நிறுவனங்களின் எண்ணிக்கை 200க்கும் மேலாகும். சீன பெருநிலப்பகுதியின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களில் 15 இங்கு புகுந்துள்ளன. 5 முன்னணி மின் உற்பத்தி தொழில் நிறுவனங்களில் 4உம், 13 பெரிய நிலக்கரி தொழில் நிறுவனங்களில் 8உம், இங்கு கிளைகளை அமைத்துள்ளன என்று தெரிய வருகிறது.

தொழில்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில், சுற்றுச்சூழலின் பாதுகாப்பிலும் சி லின் கோ லெஅரசு, கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. எட்டுத்துக்காட்டாக, இங்கு நுழைந்த தொழில் துறை நிறுவனங்கள் மீது, கண்டிப்பான பரிசீலனை மற்றும் மேலாண்மை முறையை அது மேற்கொள்கிறது.

சி லின் கோ லெ வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் huo jinbing கூறியதைக் கேளுங்கள்.,

பொருளாதாரத்தை வளர்க்கும் அதே வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சி லின் கோ லெ அரசு முதலிடம் அளித்துள்ளது. குறிப்பாக, கனிம வள அகழ்வில், சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய மதிப்பீட்டையும் ஊற்று மூல மேலாண்மையையும் வலுப்படுத்தி புதிய திட்டப்பணிகளின் நுழைவுக்கு ஒப்புதல் அளிப்பதில் தரத்தை உறுதிப்படுத்துமாறு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பல்வேறு நிலை வாரியங்களை கோருகிறோம் என்றார் அவர்.

xi lin guo le நிர்வாகப் பிரதேசத்தை,வட சீனாவின் புல்வெளி உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்புப் பகுதி, மாசற்ற கால்நடை உற்பத்திப் பொருளின் பதனீடுத் தளம், எரியாற்றல் மற்றும் பெரும் வேதியியல் தொழிற்துறை தளம் ஆகியவற்றாக உருவாக்குவதும், இதனை, உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் மற்றொரு பொருளாதார அதிகரிப்புப் பகுதியாக மாற்றுவதும் xi lin guo le மக்களின் எதிர்காலத் திட்டமாகும்.


1 2