• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-31 18:12:04    
வாழ்க்கை மாற்றத்தை வெளிப்படுத்தும் ஊதியச் சீட்டு

cri

ஆழகான சிங் தௌ

சீனாவில், ஊதியத்தை முக்கிய வருமானமாகக் கொண்ட தொழிலாளருக்கு ஒவ்வொரு திங்களும் நீண்ட மெல்லிய ஊதியச் சீட்டு ஒன்று கிடைக்கும். உழைப்பு மூலம் கிடைத்த வருமானம் இதில் பதிவு செய்யப்படுகிறது. பல பத்து ஆண்டுகளாக, ஊதியச் சீட்டு பாரமானி போல் தோன்றுகிறது. இதிலுள்ள எண்கள் சீன மக்களின் வாழ்க்கை மாற்றத்தை காட்டுகின்றன.

98 வயதான முதியவர் DU, சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஷான் துங் மாநிலத்தின் சிங் தௌ நகரில், மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் இணைந்து அமைதியாக வாழ்கிறார். வேலையிலிருந்து ஓய்வு பெறும் முன், நகரிலுள்ள ஒரு எரிபொருள் ஆலையில் தொழிலாளராக பணி புரிந்தார். தற்போது, அவர் தமது ஓய்வூதியத்தைச் சார்ந்து வாழ்கிறார். தமது ஊதிய வருமானத்தின் மாற்றம் பற்றி குறிப்பிடுகையில் அவர் கூறியதாவது—

"நவ சீனா நிறுவப்படும் முன், காலை உணவு சாப்பிட்டால் இரவில் உண்ண உணவு ஏறக்குறைய இல்லை. விடுதலை பெற்ற பின், வாழ்க்கைக்கான உத்தரவாதம் கிடைத்தது. 1975ஆம் ஆண்டில் நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். அப்போது ஊதியம் அதிகமில்லை. திங்களுக்கு சுமார் 70, 80 யுவான் மட்டுமே" என்றார் அவர்.

கடந்த நூற்றாண்டின் 60, 70ஆம் ஆண்டுகளில், சீனாவில் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது தொழிலாளரின் திங்கள் ஊதியம் சராசரியாக 38 யுவான் ஆகும்.உணவு, உடை ஆகிய அடிப்படை வாழ்க்கை தேவையை மட்டுமே இந்த ஊதியம் நிறைவு செய்ய முடியும். மேலும், பொது மக்களுக்கு மற்ற வருமானம் இல்லை என்பதால், வாழ்க்கை தரம் பொதுவாக தாழ்ந்த நிலையில் இருந்தது.
1978ஆம் ஆண்டு, அதாவது, முதியவர் DU வேலையிலிருந்து ஓய்வு பெற்ற 2 ஆண்டுகளுக்குப் பின், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை சீனா நடைமுறைப்படுத்தத் துவங்கியது. சமூகம் முழுவதிலும் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. மக்களின் ஊதிய நிலை அதனுடன் உயர்த்தப்பட்டது. முதியவர் DUஉம் சீர்திருத்தத்தின் பலனை அனுபவித்துள்ளார்.

1 2